பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/538

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

516 தமிழ்நூல் தொகுப்புக் 5೧೧ கயிலாச நாதர் சதகம்-சிதம்பரம் பிள்ளை. அண்ணாமலை சதகம் - திருச்சிற்றம்பல நாவலர். அவையாம்பிகை சதகம் - நல்லதுக்குடி கிருஷ்ணையர்

திருவேங்கட சதகம் என்னும் மணவாளநாராயண சதகம் .வெண்மணி நாராயண பாரதி 7. தண்டலையார் சதகம் என்னும் பழமொழி விளக்கம்-படிக் காசுப் புலவர் 8. அருணாசல் சதகம்- காஞ்சிபுரம் வித்துவான் சபாபதி முதலியார் 9. எம்பிரான் சதகம் - பூதுர் கோபால்கிருஷ்ண தாசர் 10. கோவிந்த சதகம் - நாராயண பாரதியார் 11. தொண்டை மண்டல சதகம்-படிக்காசுப் புலவர் 12. திருத் தொண்டர் சதகம்-திருப்பாண்டிக் கொடு முடி மலைக் கொழுந்து நாவலர் - என்பன. திருத்தொண்டர் சதகம் இஃதும் ஒரு தொகை நூல் தான். சுந்தரரின் திருத்தொண்ட்த் தொகை- நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதி - சேக்கிழாரின் பெரிய புராணம் என்னும் திருத் தொண்டர் புராணம் - ஆகிய நூல்களை அடியொற்றி எழுதப் பட்டது இது. இந்நூலாசிரியர் மலைக் கொழுந்து நாவலர், அறுப்த்து மூன்று சைவ நாயன்மார்களை, குலவாரியாகவும் - திரு மரபு வாரியாகவும் - குருவருளால் முத்தி பெற்றவர் வாரியாகவும்இலிங்கத்தால் முத்தி பெற்றவர் வாயிலாகவும். வேட்த்தால் முத்தி பெற்றவர் வாயிலாகவும்- இயலிசைத் தமிழ்த் தொடர் பானவர் வாரியாகவும் பிரித்து வகுத்துத் தொகுத்து இந் நூலை உருவாக்கியுள்ளார். மேற் குறித்துள்ள மூன்று நூல்களும் நாயன்மார்களைத் திருத்தொண்டர் என்று குறிப்பிட்டிருப்பதால், அந்நாயன்மார் களைப் பற்றிய பாடல்களின் தொகுப்புக்குத் திருத்தொண்டர் சதகம் என்னும் பெயர் வழங்கப் பெற்றது.