பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/540

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


518 தமிழ்நூல் தொகுப்புக் க்லை விவரங்கள், மக்களின் நீதி, வீரம், கொடை, கல்வி, நட்பு, நன்றி மறவாமை, அடக்க முடைமை, புலவர்களை ஆதரித்த அருமை, புலவர்களின் பெருமை, பழக்க வழக்கம் முதலியவை கூறப்பட்டுள்ளன. - - இத்திரட்டில் கொங்கு மண்டலத்தின் எல்லைகள் அறி விக்கப்பட்டுள்ளன. கிழக்கு எல்லை மதிற்கரை - தெற்கு எல்லை பழநி மலை- மேற்கு எல்லை வெள்ளியங்கிரி - வடக்கு எல்லை பெரும்பாலை ஆகும். - எறிபத்த நாயனார், செங்குன்றுார் கிழார், கோசர், குமணன், அதிகமான், ஓரி, அசதி, சீயகங்கன், பவணந்தி முனி வர், அடியார்க்கு நல்லார் முதலியோரும் கொல்லிப் பாவையும் கொங்கு நாட்டவர்கள் என்னும் செய்தி இதில் தரப்பெற்றுள் ளது. கார் மண்டல சதகம் ஆ - அவிநாசி ஆறைகிழார். ப.அ.முத்துத்தாண்டவர் உரை எழுதியுள்ளார். இம்பீரியல் பிரஸ், சென்னை.1930. காவிரி தோன்றும் இடம் (தலைக்காவிரி) முதல் சோழ நாட்டின் உய்யக் கொண்ட்ான் வளநாடு வரை உள்ள செழிப்பான பகுதியை அதாவது கார் (மேகம்) பொழியும் நீர்வளப் பகுதியைக் கார்மண்டலம்' என இந்நூல் குறிப்பிடுகிறது. இப் பகுதியின் சிறப்பு, இப்பகுதியைச் சேர்ந்த பெரியோர் வரலாறு முதலியன கூறும் சதக நூல். இது. சோழ மண்டல சதகம் ஆசிரியர் - ஆத்மநாத தேசிகர். திருவாரூர் இலக்கண விளக்கப் பரம்பரை சோமசுந்தர தேசிகர் என்பவர், நூலில் பாடப்பட்டுள்ள பெரியோர்களின் வரலாற்றை எழுதியுள்ளார். சோமசுந்தர தேசிகரின் முகவுரை: , 9 - 3-1916. மாயூரம் கமலா பிரஸ்,1916, சோழ நாட்டைப் பற்றிய இந்த நூலுள் கடவுள் வாழ்த்து உட்பட 103 ஆசிரிய விருத்தங்கள் உள்ளன. இந்நூலுள் கூறப் பட்டுள்ளவை வருமாறு: