பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/547

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பிற்காலம் 525 . இந்நூல் பாடல்கள், எளிய நடையில்-மக்கள் நடையில் - கிராமிய நடையில் சுவையாய் அமைந்துள்ளன. தொகுப் பாசிரியரே உரை விளக்கமும் தந்துள்ளார். தமிழர்_நாட்டுப் பாடல்கள் (1964) - தொகுப்பு: நா. வானமாமலை. வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட்லிமிடெட், சென்னை-2. ஜீவா அச்சகம், சென்னை-14. பதிப்பாண்டு 1964. - தெய்வங்கள், தாலாட்டு, விளையாட்டுகள், காதல், திருமணம், குடும்பம், சமூகம், உழைப்பும் தொழிலும், ஒப்பாரி -என்னும் தலைப்புகளில் நாட்டுப் பாடல்கள் உள்ளன. இந்தப் பாடல்களைத் திரட்டித்தந்தவர்கள்: எஸ்.எஸ். போத்தையா, எஸ்.எம். கார்க்கி, கவிஞர் சடையப்பன், கு. சின்னப்ப பாரதி, வாழப்பாடி சந்திரன், எம்.பி.எம். ராஜவேலு, குமாரி பி. சொரணம். இவற்றைத் தொகுத்த வானமாமலை, 28 பக்கங்கள் கொண்ட நீளமான முன்னுரை எழுதியுள்ளார். நாடோடிப் பாடல்கள் கி.வா.ஜ. தொகுத்தது. தமிழ் நாட்டின் இயற்கை எழிலை யும் இயற்கை உணர்ச்சியையும் எடுத்துக்காட்டுவன. காதல், வீரம், கோபம், சிரிப்பு, குழந்தையுள்ளம் - முதலியவை பற்றி யன-மானேஜர், கலைம்கள், மயிலாப்பூர் என ஒரு புத்தக விளம்பரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. கி.வா.ஜ. தொகுத்ததாக் முன் ஒரு நூல் கூறப்பட்டுள்ளதேஅதே நூல் தானோ இது - அல்லது - இது வேறு தனித், தொகுப்போ-தெரியவில்லை. நாடோடிப் பாடல்கள். இது, தமிழக அரசு ஒலைச் சுவடி நூலகத்தில் உள்ளது. இதன் சுவடி எண்: R.3401. - இத்தொகுப்பில், தில்ல்ே லேலோ’ என்று தொடங்கும் பாடல் தொடர்ச்சியும், முத்து வீராயி' என்று முடியும் பாடல்