பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/553

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்காலம் - 531 வ.உ.சி. பாடல் திரட்டு (1915) - - வ.உ. சிதம்பரனார் இயற்றிய தனிப்பாடல்களின் திரட்டு இது. அச்சு : இந்தியா பிரின்டிங் வொர்க்ஸ், சென்னை, 1915, இது இரண்டு பாகமாக உள்ளது. முதல் பாகம், இவர் சிறை செல்வதற்கு முன் இயற்றிய 97 பாடல்களின் திரட்டாகும். இரண்டாம் பாகம், சிறையில் இருந்த போது இயற்றிய 284 பாக்களின் திரட்டாகும். ஆகமொத்தம் 381 பாடல்கள். இவற்றுள், நூறு (100) பாடல்கள் கடவுள் பற்றியவை. வேறு நூறு (100) பாடல்கள் ஒழுக்கம் பற்றியவை. 181 பாடல்கள் சுற்றத்தார்க்கும் நண்பர்கட்கும் எழுதியவை. - * ஆசிரியர் தம் முன்னுரையில், தாம் இருந்த சிறை நிலைமை பற்றியும், தம் சிறை வாழ்க்கை நிலைமை பற்றியும் எழுதியுள் 6rrгrrio, - . தனிப் பாடல் திரட்டு(1921 - 1) முதல் பாகம். காளமேகம் முதல் பல பட்டடைச் சொக்க நாதப் புலவர் ஈறாக உள்ள முப்பது புலவர்கள் பாடிய 839 பாடல்களின் தொகுப்பு இது. உரை: காஞ்சி இராமசாமி நாயுடு. ஆண்டு 1921. பின்வரும் மூன்று அச்சுக்கூடங்களில் அச்சிடப் பெற்றது:- (1) பெரிய நாயகியம்மன் அச்சுக் கூடம், (2) சன் ஆப் இந்தியா அச்சுக்கூடம், (3) மதாாஸ் என்.சி. கோல்டன் எலெக்டிரிக் அச்சியந்திர சாலை - சென்னை. தனிப் பாடல் திரட்டு(1921-2) r இரண்டாம் பாகம். பல புலவ்ர்கள் பாடியவை. உரை: கா. இராமசாமி நாயுடு. சென்ன்ை வித்தியா ரத்நாகர அச்சுக் கூடம் - ஆண்டு - 1921. இதன் முதல் பாகம் கா. இராமசாமி நாயுடு உாையுடன் சென்னை பத்மநாப விலாசம் பிரசில் 1905 ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது. இந்த இரண்டாம் பாகம் - சென்னை வைத்திய ரத்நாகரம் பிரசில் 1907 ஆம் ஆண்டு முன் ஒரு முறை அச்சாகி வெளிவந்துள்ளது. தனிப் Lłîîl_ši) திரட்டு - - கம்பர், காளமேகம் முதலியோரின் தனிப் பாடல்களை இராமநாதபுரம் சமத்தானம் பொன்னுசாமித் தேவர் தொகுத்து வெளியிட்டது. மற்ற விவரம் தெரியவில்லை.