பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/567

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்காலம் 545 பர்டல்களையும் ஒரு நாளைக்கு ஒன்று வீதம் எழுத ஆசிரியருக்கு ஒரு தோற்றம் (சுமார்) 14 ஆண்டுகள் பிடித் திருக்க வேண்டும். அருந் தமிழ்த் திரட்டு * - தஞ்சை சரசுவதி மகால் நூலகப் புத்தகப் பட்டிகை முதல் தொகுதி 272 ஆம் பக்கத்தில் இத்திரட்டு பற்றி அறிவிக்கப் பட்டுள்ளது. இதில், காளமேகம், ஒட்டக்கூத்தர் முதலியோரின் பாடல்கள் உள்ளன. இது தனிப்பாடல் திரட்டு வகையைச் - சேர்ந்த திர்ட்டாகும். இதுவரை அச்சிடப்படாத பாக்களும் இதில் உள்ளன. - தஞ்சை சரசுவதி மகால் நிலையத்தில், தனிப்பாடல் திரட்டு என்னும் பெயரில் எட்டு வெவ்வேறு நூல்கள் உள்ளன இவ்வெட்டும் அருந்தமிழ்த் திரட்டு போன்றவையே; அதாவது தனிப்பாடல் திரட்டு வகையைச் சேர்ந்தவை - இவற்றின் காலம் அறியப்படவில்லை. தண்டபாணி சுவாமிகள் தனிப்பாடல் திரட்டு ஆ-தண்டபாணி சுவாமிகள். தொ - வெ - கெளமார மடாலயம், திருவாமாத்துரர். அனுமான் அச்சியந்திர சாலை, விழுப்புரம், 1968. உ-விநாயகர் முதல் துதிப்பாடல் வரை 36 தலைப்புகளில் பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு தலைப்பிலும் பற்பல பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு தலைப்பையும் ஒரு சிறுநூல் என எண்ணக் கூடிய அளவில் பாடல்கள் நிரம்ப உள்ளன. - - - தனிப் பாடல் திரட்டு - - முதலிலும் இறுதியிலும் பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் சில பாடல்கள் உள்ளன. இடையில், கரிகாலனைப் பற்றிய பாடல்கள்-மதுரைத் தியாகேசர் மீது 50 தாழிசை-ஆசிரிய விருத்தம் - அருணகிரிநாதர் மீது வண்ணம், அரங்கநாதர் வண்ண்ம்-திருவரங்கக் கலம்பகப் பாடல்கள் சில - ஆகியவை உள்ளன.