பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/627

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இருபதாம் நூற்றாண்டு 605 சின்னஞ் சிறு பாடல்கள் ஆசிரியர் - அழ. வள்ளியப்பா. வெளியீடு - குழந்தைப் புத்தக நிலையம், விற்பனை உரிமை - பாரி நிலையம், இரண்டாம் பதிப்பு - 1963. ஜீவன் பிரஸ், சென்னை - 5. - உள்ளுறை: தொந்திக்கணபதி முதல் ஞாயிற்றுக் கிழமை பிறந்த பிள்ளை வரை 24 தலைப்புகளில் பாடல்கள் உள்ளன. கதைப் பாடல்கள் ஆசிரியர்: அழ. வள்ளியப்பா. வெளியீடு - குழந்தைப்புத்தக நிலையம், சென்ன்ை. விற்பனை உரிமை - பாரி நிலையம். ஜீவன் பிரஸ், சென்னை முதல் தொகுதி - 1962. 'ஆமையாரின் அவசரம் முதல் குழந்தைச் சண்டை வரை பல தலைப்பு களில் பாடல்கள் உள்ளன. இதன் இரண்டாம் தொகுதியும் குழந்தைப் புத்தக நிலையத்தாரால் வெளியிடப்பெற்றுள்ளது. குழந்தை விருந்து ஆசிரியர்: இராசா. வெளியீடு: தமிழ் நூலகம், புதுவை-3. கற்பகம் பிரிண்டர்ஸ். புதுவை. 1968. உள்ளுறை: சிட்டுக்குருவி, கிளியே வா, பூனை, நாய், பசு, யானை, பூனையும் யானை யும், இயற்கை, மழை, வெண்ணிலா, காற்று, எறும்பு, தேனி. காக்கையும் தண்ணிர்க் குடமும், கை தட்டு, நடை வண்டி, பழங்கள், கண் வளராய், பொம்மை வாங்கலாம், நல்ல குடும்பம், வானவூர்தி, பாப்பா கேள், திருக்குறள், எங்கள் காந்தி, வாய்மை வெல்லும், உண்மைக்குப் பரிசு - ஆகிய 26 தலைப்புகளில் பல பாடல்கள் உள்ளன. முத்துப் பாடல்கள் - ஆ - மயிலை சிவ முத்து. புக்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட், சென்னை. 1959. உ - எங்கள் அப்பா முதல் தமிழ் மொழி வாழ்த்து வரை - 45 தலைப்புகள் படங்களும் உண்டு. குழந்தைக் கவிதைகள் ஆ-நாக முத்தையா. வெ-தமிழ்ப் புத்தகாலயம் சென்னை. சாந்தி பிரஸ், சென்னை. 1960 உ-வணக்கம், உயர்ந்த நெறிகள்,