பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/641

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நான்கு காலம் 619 பெருந்தொகை தொ-மு. இராகவையங்கார், இராமநாதபுரம். மதுரைத் தமிழ்ச் சங்கச் செந்தமிழ் வெளியீடு 62 ஆவது. மதுரைத் தமிழ்ச் சங்க முத்திரா சாலையில் அச்சிட்ப்பட்டது. யுவ ஆண்டு. 1935-36, 194 நூல்களிலிருந்து. எடுக்கப்பட்ட பாக்களின் தொகுப்பு. கடவுள் வாழ்த்தியல், அறவியல், பொருளியல், இன்ப இயல், ஒழிபியல் என்னும் ஐந்தியல்கள் கொண்டது. முதல் மூன்று இயல்களே அச்சிடப்பட்டுள்ளன. கடவுள் வாழ்த்தியல் முதல்-220 பாடல்கள்-அறவியல் 221 முதல் 346 வரை-பொருளியல் 347 முதல் 2214 வரை. இது. முதல் தொகுதி. இரண்டாம் தொகுதியில் 1500 பாடல்கள். ஆக மொத்தம் 3700 பாடல்கட்கு மேல் உள்ளன. பாடல்களுக் குச் சிறப்புக் குறிப்புரைகளும் உள்ளன. மு. இராகவையங்கார் முகவுரை-14-12-1935. முகவுரையில் உள்ள சில கருத்துகள் வருமாறு:- * இதில், தொல்காப்பியம், யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை, வீரசோழியூம் ஆகிய நூல்களின் உரைகளிலும், மற்றும் முற்கால-பிற்கால இலக்கியங்களின் உரைகளிலும் உள்ள மேற்கோள் பாடல்களுள் முன்வந்தவை போக வராத பாடல்கள் உள்ளன. இன்ன நூலைச் சேர்ந்தவை என்று அறிய முடியாத எடுத்துக் காட்டுச் செய்யுட்களும் உள்ளன. உரைய்ாசிரியர்களால் பெயர் கூறி ஆளப்பட்டு இப்போது கிடைத்தற் கரியவாயுள்ள பாரதம்-தகடுர் யாத்திரை-முத் தொள்ளாயிரம் - ஆசிரிய மாலை முதலிய நூல்களில் உள்ள பாடல்களும் உள்ளன. மற்றும் பற்பல புத்தக சாலைகளிலும் பிறர்பாலும் உள்ள ஏட்டுப் பிரதிகளிலும் பத்திரிகைகளிலும் தெரியவந்த பழம் பாடல்கள் உள்ளன. மேலும், பரம்பரைப் புலவர்கள் மூலமாகவும் தமிழ் மக்கள் சிலர் மூலமாகவும் வாய் மொழியாகக் கிடைத்த தனிக்கவிகளும் உள. மற்றும், தாமிரச் சாசனங்களில் , அரசர்-பெரியோர் முதலியோர் பற்றியும், அறச்செயல்கள் பற்றியும் முன்னோர் அருமையாய்ப் பாடிப்