பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/689

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நான்கு காலம் 667 சென்னை வைஜயந்தி அச்சுக் கூடம். சாதாரண ஆண்டு. 1910. உள்ளுறை: திருத்துருத்தி கச்சி விநாயகர் பதிகம் முதல், பூவாளுர்ப் பதிற்றுப்பத்தந்தாதி வரையிலான 40 நூல்களின் தொகுப்பு இது. பிள்ளையவர்கள் மலை மலையாக எழுதிக் குவித்துவிட்டிருக்கிறார். இது ஒர் ஆசிரியரின் திரட்டு. கந்தசாமி பிள்ளை பிரபந்தத் திரட்டு வடலூர் வள்ளலாரின் அடியவர் காரணப்பட்டு ச.மு. கந்தசாமி பிள்ளை இயற்றிய நூல்களின் திரட்டு இது சரித் திரக் கீர்த்தனை முதல் கற்புடைப் பெண்டிர் வரையிலான 24 நூல்களின் திரட்டு இது. ஆய்வு: சிதம்பரம் ஈசானிய மடம் இராமலிங்க சுவாமி, சென்னை, சூலை, சன் ஆப் இந்தியா அச்சுக் கூடம், 1923. திருப் போரூர்ச் சந்நிதி முறை திருப்போரூர் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு முருகன் திருப்பதி. சென்னைக்கு ஒரளவு அண்மை என்று கூறலாம். அந்த வட்டாரத்தில் மிகவும் புகழ் பெற்ற திருப்பதி யாகும் இது. இப்பதி முருகன் மீது சிதம்பர சுவாமிகள் என்னும் அருளாளர் பாடியுள்ள சிறு சிறு நூல்களின் தொகுப்பாகும் இது. இதைப் பலர் பதிப்பித்துள்ளனர். சில காண்பாம்: திருப் போரூர்ச் சந்நிதி முறை இந்தப் பெயரிலுள்ள ஒரு பதிப்பின் விவரமாவது:காஞ்சி சபாபதி முதலியார் முன் பரிசோதித்த பிரதிக்கு இணங்க, திரு வெண்காடு ஆறுமுக சுவாமிகள் பதிப்பித்தது. பிரமோதுரத- மார்கழி. இது மிகவும் பழந்தாள். திருப்போரூர் முருகன் மீது சிதம்பர சுவாமிகள் பாடியுள்ள நூல்கள் வருமாறு: பிள்ளைத் தமிழ், அலங்காரம், மாலை, தாலாட்டு, திருப்பள்ளி யெழுச்சி, பெரிய கட்டியம், சின்ன கட்டியம், எச்சரிக்கை, வண்ணத் தாழிசை, மட்டு விருத்தம், கலி விருத் தம், பெருங்கழி நெடில் விருத்தம், குயில் பத்து, கிளிப் பத்து, வண்டு விடு தூது, கட்டளைக் கலிப்பா, கொச்சகக் கலிப்பா, ஊசல், விருத்தக் கலித்துறை, அட்டகம், பெருங்கழி நெடில்