பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


у புறநானூறு தொடங்கி, கவியரசு கண்ணதாசன் கவிதைத் தொகுதிகள்வரைதொகைசெய்யப்பட்டுள்ளன. வைரமுத்துவின் நாளும் மலரும் புதுக்கவிதைகளும் நன்மாலையாய்த் தொகுக்கப் பெற்றுள்ளன. தொகுப்புக்களால் பாடல்கள் வடிவமும், வலிமையும் பெறுகின்றன; வாழ்வும் காப்பும் பெறுகின்றன. ஒரு குடும்பத்துப் பிள்ளைகளை விழாக்காலங்களில் ஒரு சேரப் பார்ப்பதால் ஏற்படும் மகிழ்ச்சிபோல் பல்வேறு கால்ங்களில் சூழல்களில் பல்லோரிடம் மலர்ந்த கருத்து மலர்களைத் தொகுப்பாளர் மாலையாகத் தரும்போது தொகை கோடி இன்பம் தருகிறது. - நாற்பது, நானுாறு, நாலாயிரம் எண்ணிக்கையிலுள்ள தமிழ் இலக்கியத்தொகுப்புக்கள், பன்னூல் திரட்டுக்கள், கவிதைக்களஞ்சியம், தனிப்பாடல் திரட்டுக்கள், கவிதை மலர்கள், கட்டுரை மாலைகள் இன்னோரன்ன தொகுப்புக்கள் பலவடிவின; பலவகையின; பல்வகைப் பயன் தருவன. சங்கப்பாடல்களை அகம் புறம் எனப் பகுத்துத் திணை பற்றியும் அடியலகு பற்றியும் தொகுத்த சான்றோர் திறம் எண்ணி வியத்தற்குரியது. சங்க இலக்கியத்தைச் சைவ சித்தாந்த சமாஜம் (சைவ சித்தாந்தப் பெருமன்றம்) புலவர் வரிசையைத் தொகுத்ததும் போற்றுவதற்குரிய பெருஞ்செய லாம். திருமால் பற்றிய நாலாயிரம் தெய்வப் பனுவல்களைத் திவ்வியப் பிரபந்தம் என்ற சீரிய கட்டமைப்பில் தொகுக்கப் பெற்ற திறன் நம்சிந்தையை மகிழச் செய்கிறது. ஒவ்வொரு பாட்டின் முதற்சீரும் இறுதியில் சுட்டப் பெறுவது கட்டுக் கோப்புக் கலையாமல் இருப்பதற்கும் பாடல் நினைவு கொள் வதற்கும் ஏற்றதொரு சிறந்த அமைப்பாகத் திகழ்கிறது. சைவத் திருமுறைக்ளைப் பண்ணை அடிப்படையாகக் கொண்டும் தலங்களை அடிப்படையாகக் கொண்டும் பகுத்துத் தொகுத்த திறன் தொகுப்பியற் கொள்கை வளர்ச்சியின் உயர் நிலை ஆகும். திருமுறைகள் நிலைபேற்றுக்கும் காலங்கடந்த வாழ்வுக்கும் சிறப்பாக அமைந்த இத் தொகுப்புக் கொள்கையே காரணம் எனலாம். தவத்திரு ஊரனடிகள் நம் காலத்தில் (1980) திருவருட்பா முழுமைக்கும் வரிசை எண்ணிட்டுத் தொகுத்து வகைப்படுத்திய