பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/730

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


708 தமிழ்நூல் தொகுப்புக்கலை தாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். தொ-வா. சரவண முத்துப் பிள்ளை. வெ-பி. இரத்தின நாயகர் அண்டு சன்ஸ். திருமகள் விலாச அச்சு நிலையம், சென்னை. 1954. இந்தத் திரட்டு மூன்று பாகங்களாக உள்ளது. முறையே அவற்றில் உள்ள நூல்கள் வருமாறு: முதல் பாகம் சிவ வாக்கியர் பாடல்-520. பட்டினத்தாரின் நூல்கள் சில, திருவள்ளுவர் ஞானம், பட்டினத்தார் புலம்பல்கள் சில, பட்டினத்தார் ஞானம் 100, பத்திரகிரியார் புலம்பல், பாம் பாட்டி சித்தர் பாடல்-129, இடைக்காட்டுச் சித்தர் பாடல்130, அகப்பை சித்தர் பாடல்-90, குதம்பை சித்தர்.பாடல்-32, கடுவெளி சித்தர் பாடல், சிவயோக சாரம் முதலிய நூல்கள் முதல் பாகத்தில் உள்ளன. இரண்டாம் பாகம் அகத்தியர் ஞானம், அழுகணி சித்தர் பாடல், கொங்கணர் வாலைக் கும்மி, உரோமரிஷி ஞானம், திரு மூலர் ஞானம், கருவூரார் பூசா விதி, ஞானசர நூல் சாத்திரம், சிவானந்த போதம் - 100, நிஜானந்த போதம், நெஞ்சறி விளக்கம், ஞான ரத்தின குறவஞ்சி, ஞானக்கும்மி-185, சுப்பிரமணியர் ஞானம் -32, வல்மீகர் சூத்திர ஞானம், சிவ நாமாவளித் திரட்டு -முதலிய நூல்கள். மூன்றாம் பாகம் சிவ போக சாரம், சொக்க நாத வெண்பா-94, சட்டை முனி முன்ஞானம்-102, சட்டை முனி பின் ஞானம்-101. காகபுசுண்டர் ஞானம்-80, காகபுசுண்டர் உபநிடதம்-31, காகபுசுண்டர் காவியம்-33, சூரியானந்தர் சூத்திரம்-13முதலிய நூல்கள் உள்ளன. இது, அளவிலும் பொருளிலும் பெரிய நூலாகும். பெரிய அறிவுக் கருவூலம்-தத்துவம் கருவூலம்-என்னும் சிறப்பிற்கு உரியது இது.