பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/750

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


723 தமிழ்நூல் தொகுப்புக் கலை இராமசாமி ஞான தேசிகத் திரட்டு ஆ.இராமசாமி ஞான தேசிக சுவாமிகள். வெ-இராம சாமி சுவாமிகள் சஜ்ஜன பண்டு சங்கம்-ஆனந்தாசிரமம்குமார பாளையம்-1971- பதவுரை - விளக்க உரையுடன் - 3 நூல்களின் திரட்டு-அவையாவன: !. நாநா சிவவாதக் கட்டளை - (சீவன்களின் நிலைமை, ஐம்புலன்கள் முதலியன பற்றியது. கீதாசாரத் தாலாட்டு - (கண்ணனைக் கீதாசாரிய னாகக் கொண்டு, குழந்தையாக்கித் தாலாட்டுவது). சசி வன்ன போதம்-சசி வன்னன் என்பவன் பஞ்சமா பாதகம் புரிந்து தொழு நோய்க்கு ஆளாகிறான். அவன் தந்தை யக்ஞ பாகன் என்பவனது வேண்டு கோளின்படி ஒரு முனிவர் சசிவன்னனுக்குப் போதிக் கிறார் - உபதேசம் செய்து கடைத் தேற்றுகிறார். முனிவர் சசி வன்னனுக்குக் கூறிய உபதேசமே சசி வன்ன போதம்-என்பன.