பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$4G8 தமிழ் நூல் தொகுப்புக் கக் எது எப்படி யிருந்த போதிலும், பலர் பாடிய பாடல்களின் தொகுப்பே திருவள்ளுவ மாலை என்பதில் ஐயமில்லை. மாலையின் மாண்பு: திருவள்ளுவ மாலைப் பாடல்களுள் இறுதியிலுள்ள இடைக் காடர் பாடலும் ஒளவையார் பாடலும் குறள் வெண்பாக் களால் ஆன்வை; மற்றவை நேரிசை வெண்பாக்களால் ஆனவை. இடைக்காடரும் ஒளவையாரும் திருக்குறளின் கருத்துச் செறிவைப் போட்டிபோட்டுச் சிறப்பித்துள்ளனர். திருக்குறளுக்கு எவ்வளவு பெருமை உண்டோ அவ்வளவு பெருமையினையும் சங்கப் புலவர்கள் கூறத் தவறவில்லை. திருக்குறள் இப்பொழுது என்னென்ன சிறப்புக்கள் பெற்றுள்ளதோ - எவ்வ்ெவ் வகை யி ல் உலகத்தாரால் பாராட்டிப் பயன்படுத்தப் படுகின்றதோ - அவை யனைத் தையும் சங்கப் புலவர்கள் அப்போதே முன்கூட்டி யறிந்து வைத்துத் திருவள்ளுவ மாலையில் அறிவித்துள்ள அரும் பெருந் திறனைத் திருவள்ளுவ மாலையைக் கற்பவர்கள் நன்கறிவர். "என்றும் புலராது யாணர்காட் செல்லுகினும் கின்றலர்ந்து தேன்பிலிற்று நீர்மைய தாய்"- - - (இறையனாt-3); "வள்ளுவரும் தங்குறள்வெண் பாவடியால் வையத்தார் உள்ளுவவெல் லாம் அளந்தார் ஓர்ந்து'- (பரணர் : 6): 'தந்தான் உலகிற்குத் தான். வள்ளுவளுகி' - (காரிக் கண்ணனர்-28); "வள்ளுவர் உலகம் கொள்ள மொழிந்தார் குறள் - (நரி வெரூஉத் தலையார்-33): "...உலகடைய உண்ணுமால் * - - வண்டமிழின் முப்பால் மகிழ்ந்து - (ஆலங்குடி வங்களுர்-53). இந்தப் பாடற் பகுதிகளால், திருக்குறள் என்றும் அழியாத புத்தம்புதிய உலகப் பொதுநூல் என்பது புலப் படும். இத்தகைய சரியான கணிப்பின் வாயிலாகத் திருவள்ளுவ மாலையின் மாண்பு மிகவும் உயர்ந்து காணப் பெறுகிறது. - 21. ஆசிரிய மாலை அநூல் அறிமுகம் : கடைச் சங்க காலத்தை யடுத்த நூல்களுள் ஒன்ருக ஆசிரிய மாலையைக் குறிப்பிடலாம். இது பல ஆசிரியப்பாக் களின் தொகுப்பு நூல் என்பது பெயரிலிருந்தே தெரிகிறது. ப்லர்பாக்களின் தொகை நூலாகக் கருதப்படும் இந்நூல் நாற்ருண்டிலோ அல்லது அதற்கு முன்போ தொகுக்கப்பட்ட தாகக் கருதப்ப்டும் புறத்திரட்டு என்னும் நூலில், ஆசிரிய மாலை எனப்பெயர் குறிப்பிடப்பட்டுப் பதினறு பாடல்கள் இடம் பெற்றுள்ளன.இந்தப் புறத்திரட்டு என்னும் தொகை நூல் இல்லையேல். ஆசிரிய மாலே என்னும் நூற் பெயரை அறிந்து கொண்டிருக்க முடியாது. . புறத்திரட்டில் உள்ள ஆசிரியமாலைப் பாடல்கள் அறன் வலியுறுத்தல், தவம், நிலையாமை, கொடுங்கோன்மை, நிரை கோடல்,இராமகாதை முதலிய பல்வேறு பொருள்களப் பற்றியனவாயிருத்தலின், பல்வேறு காலத்தில் பல்வேறு இடங்களில் வாழ்ந்த புலவர்கள் பலரால் இயற்றப் பெற்ற பல உதிரி ஆசிரியப் பாக்களின் தொகுப்பு நூல் இது - என்னும் செய்தி உறுதியாகிறது. வெண்பாவால் ஆன புறப் பொருள் வெண்பாமாலை என்னும் நூல் வெண்பா orä .gs Göf வழங்கப்படுவது போல, ஆசிரியப் பாவாலான இந்நூல் ஆசிரிய மாலை" என வழங்கப்பட்டுள்ளது. மேற்கோள் ஆட்சி : ஆசிரிய மாலைப் பாடல்களைத் தொல்காப்பிய ೭೮ಹಂಗಿಷ್ಟು மேற்கோளாக எடுத்தாண்டுள்ள உரையாசிரியர்கள் நூற் பெயரைக் குறிப்பிடவில்லை. தொல்காப்பியம் - புறத்திணை வியலில், கூதிர்வேனில் என்னும் நூற்பாவின் @s-ಡಿಲ್ಲ அள்ள எட்டு வகை நுதலிய அவையகத்தானும் என்னும்