பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi 4. பதினறு படலம்,5. கடைச்சங்க காலம்,6. எட்டுத்தொகை, 7. நெடுந்தொகை, 8. குறுந்தொகை, 9. நற்றிணை, 10. புறநானூறு, 11. ஐங்குறுநூறு, 12. பதிற்றுப்பத்து, 13. கலித்தொகையும் பரிபாடலும், 14. எழுபது பரிபாடல், 15. பதினெண்கீழ்க்கணக்கு, 16. நாலடியார், 17. பழமொழி, 18. இன்னிலை, 19. ஆசாரக் கோவை, 20. திருவள்ளுவமாலை, 21. ஆசிரிய மாலை, 22. பன்னிரு பாட்டியல் ஆகிய தகுதி வாய்ந்த - முழுமை செறிந்த தலைப்புகளில் நூல் தொகுப்புக் கலை யை நுணுகி ஆராய்கிறது. . ஏறத்தாழ 329 பக்கங்கள் கொண்ட இப்பகுதி நூலாசிரியரின் நுண்மாண் நுழைபுலத்தைத் திண்னிதின் விளக்கிக் காட்டும் திறம்படைத்ததாகும். புலவரேறு - சுந்தர-சண்முகஞர் உழைப்பின் உருவம்: - ஆராய்ச்சியின் அணிகலம். இப் பெரியார் அரிதின் முயன்று உருவாக்கியுள்ள இந்த நூல் தொகுப்புக் கலை : தமிழ்த் தாய் - ஆராய்ச்சி அன்னை - பெற்ற அரும் பரிசாகும். நூல் தொகுப்புக் கலை நூலாசிரியர் வாழ்க வெல்க ! பல்கலைக் கழகத் ) தமிழ்த்துறை, } க. ச ஞ் சீ வி சென் ை. மதிப்புரை உயர்திரு. டாக்டர் வ. சுப மாணிக்கம், எம். ஏ., எம். ஒ. எல்., பிஎச். டி. அவர்கள் தமிழ்ப் பேராசிரியர், தலைவர், இந்திய மொழிப் புலம், அண்ணுமலைப் பல்கலைக் கழகம், அண்ணுமலை நகர். புலவர் சுந்தர சண்முகனர் எழுதியுள்ள தமிழ் நூல் தொகுப்புக் கலை' என்னும் நூல் தமிழுலகிற்குப் புதியது. தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணையாவது, தமிழ ாராய்ச்சிக்கு .வல்லது ـاتrع6ونه நூலின் தொடக்கத்தில் கிரேக்கம் முதலான பிறமொழி களின் தொகைநூல் வரலாறுகள் வேண்டுமளவு காட்டப்பட் டுள்ளன. இத் தோற்றுவாயினுல் தமிழ்த் தொகைகளின் சிறப் பையும் தொல்வரவையும் ஒப்பிட்டுக் காணும் ஒரு வாய்ப்பை நாம் பெறுகின்ருேம். கருத்துத் தெளிவிற்காக, பன்மலர் மாலை, தனிமலர் மாலை, பன்மாலைத் திரள், தனி மாலைத் திரள், மலரும் மாலையும் எனப் புதிய குறியீடுகளே ஆசிரியர் ஆக்கிக்கொண் டிருப்பது ஏற்கத்தக்க முறையாகும்.