பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*94 தமிழ் நூல் தொகுப்புக் கலை அத்தகைய நூல்கள் எல்லாவற்றையும் தொை இங்கே எடுத்துக் கொள்ளவில்லை. - அன்றியும், - முதல் வகுப்பிலிருந்து கலையிளேஞர் (B.A.) தருவதற்காக இதுவரையும் கநூல்களாக வகுப்பு வரையிலும் கற்றுத் ஆயிரக்கணக்கான தமிழ்ப்பாட நூல்கள் (Tamil Text Books) பல நிறுவனங்களாலும், அரசாங்கத்தாலும், பல்கலைக்கழகங் களாலும் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு தமிழ்ப்பாட நூலையும் ஒவ்வொரு தொகை நூலாகக் கூறலாம். இந்தத் தமிழ்ப் பாடநூல்களையும் தொகைநூல் களாக நாம் ஈண்டு எடுத்துக் கொள்ளவில்லை. பண்டு எல்லா நூல்களுமே செய்யுள் நடையிலேயே எழுதப்பட்டன. இந்த நடைமுறை, வேறு பழைய மொழி களிலும் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. எந்த நூலேயும் செய்யுள் நடையில் எழுதினால், நெட்டுருச் செய்வதற்கும் தினேவில் நிறுத்துவதற்கும், சுவைத்து இன்புறுவதற்கும் தக்க வாய்ப்பாக இருக்கும் என்று கருதி அவ்வாறு செய்யப்பட் டிருக்கலாம். மேலும், மக்கள் உரையாடும் உரைநடையில் எழுதுவதினும் செய்யுள் நடையில் எழுதுவதே கற்றறிந்த புலவர்கட்குப் பெருமையாகும் என்றும் கருதப்பட்டிருக் கலாம். இந்த அடிப்படையில், தமிழில் எல்லாத்துறை நூல்களுமே - எல்லாக் கலை நூல்களுமே செய்யுள் நடையில் எழுதப்பட்டது இயல்பே. எனவே, கணக்கு, மருத்துவம், சோதிடம், அகர வரிசை (அகராதி), மெர்ழியியல் ..(இலக்கணம்) முதலிய அனைத்தும் தமிழில் செய்யுள்நடை யிலேயே உள்ளன. ஆகவே, சுவைத்து இன்புறுங் கூறு சிறிது குறைவாயிருப்பினும், இத்தகைய துறைகளைச் சேர்ந்த பாடல்களின் தொகுப்பு நூல்களும் தொகைநூல்களாக இந்நூலில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன. நூல் தொகைப் பட்டியல் : ஒரு மொழியில் உள்ள நூல்களின் பெயர்களைக் கால வாரியாகவோ அல்லது இரண்டும் அமையவோ வரிசைப் படுத்தித் தொகுக்கப்பட்டுள்ள பட்டியல், நூல் தொகைப் தமிழ் மொழியில் நூல் தொகுப்புக் கலை 9 5 பட்டியல்’ எனப்படும். இதனை ஆங்கிலத்தில் Bibliography.” (பிபிளியோகிராஃபி) என்கின்றனர். நூலின் பெயருடன், நூலின் இயல்பு, ஆசிரியர் பெயர், அச்சான ஆண் டு - இடம் அச்சிட்டவர்-வெளியிட்டவர் பெயர் முதலிய சிறு விவரங்கள் கொடுப்பதும் உண்டு : எனவே, இதனை, "ருால் விவர அட்டவனே என்றும் அழைப்பர். ஜான் மர்டாக்" என்னும் அறிஞர், தமிழில் அச்சாசியிருந்த நூல்களின் விவர அட்டவனை ஒன்றை கி. பி. 1865-ல் வெளியிட்டார். மற்றும், தமிழ் மொழி - இலக்கியம் பற்றி நூற்ருெரு பக்கங்கள் கொண்ட ஒர் ஆராய்ச்சி முகவுரையும் இவர் இந்த நாலுக்கு முன்னுல் அமைத்துள்ளார். தமிழ் நூற்ருெகைப் பட்டியவில் இதனே முதலாவதாகக் கூறலாம். கர்னல் மெக்கன்சி’ என்னும் பெரியார், 18ஆம் நூற்ருண்டின் பிற்பகுதியில், தென் நாட்டின் பல இடங்களில் இருந்த பழைய தமிழ்ச் சுவடிகள் பலவற்றைத் தேடிக் கண்டுபிடித்துக் கொணரச் செய்து பட்டியல் தொகுத்து வைத்தார். மனேன்மணிய ஆசிரியர் சுந்தரம்பிள்ளையவர்களும் நூற்ருெகை விளக்கம்: என்னும் பெயரில், பட்டியல் நூல் ஒன்று வெளியிட்டார். இக் காலத்தில் சில நூல் நிலையங்களும் இவ்வாறு வெளியிட் டுள்ளன. தமிழக அரசும் "தமிழ் நூல் விவர அட்டவணை" என்னும் பெயரில், அண்மைக் காலத்தில் பட்டியல்கள் வெளி யிட்டுள்ளன. இவையெல்லாம் நூல் தொகைப் பட்டியல், (Bibliography) gnešysgyth Guuri Gugolub. தொகை நூல் பட்டியல் : ஆனல், நாம் இந்த ஆராய்ச்சி நூலில் ஆயிரக்கணக்கில் தொகுத்துக் கொடுக்கவிருப்பது 'நூல் தொகைப்பட்டியல்" அன்று. நாம் கொடுக்கப் போவது தொகை நூல் பட்டியல்’ - ę ● 学 命 ஆகும. அஃதாவது. பல பாடல்களை ஒரு நூலாகத் தொகுத் துள்ள தொகை நூல்கள் பலவற்றை நாம் ஆராய்ந்தறிய இருக்கிருேம். எனவே, நூற் பெயர்த் தொகைக்கும் தொகை நூலுக்கும் உள்ள வேறுபாட்டை நன்கு உணர வேண்டும். வேண்டுமானுல், நூல்தொகைப் பட்டியல்கள் பல துசத்