பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 தமிழ் நூல் தொகுப்புக் கலை தான் காதலித்த பெண்ணை மணந்து ಅಣ್ಣಿ மடலேறும் காதலன், ஆவிரம் பூமாலையைத் தனத Զfւն» மார்பிலும் அணிந்து கொள்வான் என்னும செய்தியை, 'பிடியமை நூலொரு பெய்ம்மணி கட்டி - 3 * அடர் பொன் அவிரேய்க்கும் ஆவிரங் கண்ணி -> _ என்னும் கலித்தொகை (l40) பாடல் பகுதியாலும், '? நச்சிஞர்க்கினியர் எழுதியுள்ள, 1.தலையினும் மாாபனும கிடக்கின்ற இவை தகடாகிய பொன்னினது ఎవాత శ్రీ: ஒக்கும் ஆவிரம் பூவாற் செய்த ஆண்ணியும். எனனுடி உரைப் பகுதியாலும் அறிந்து கொள்ளலாம், இன்னும் இதனே, as * ه همي "...பணிவார் ஆவிரைப் பன்மலர் சேர்த்தித் தாருங் கண்ணியும் ததைஇ...” - - என்னும் குணநாற்பது பாடல் பகுதியாலும் அறியலாம். 象 - இந்த மாலையைக் காதலன் ஏறும் மடல்மாக் குதிரைக்கும் குட்டுவது உண்டு என்னும் செய்தியை, ● பொன்னேர் ஆவிரைப் புதுமலர் ിങ്ങl-8 பன்னூல் மாலைப் பனைபடு கலிமாப் (173) பூண்மணி கறங்க ஏறி. ' - o, என்னும் குறுந்தொகைப் பாடற் பகுதியால் αθωωτιο, இதுகாறும் கூறியவற்ருல், மக்களிடையேயும், - புலவா களிடையேயும் ஆவிரம் பூவும் மாலையும் பெற்றிருந்த செல்வாக்கினை அறிய முடிகிறது. எனவேதான், பயனுள்ள பாடல்களின் .ெ தா. கு ւ ւ நூலுககு. f யாவிரை' என்னும் பெயர் அன்று வைக்கபபடடது போலும்! களரியாவிரை என்னும் முழுப் பெயர், 67hr೧ಾಶ್ವ கிளர்பூங் கோதை என அகநானூற்றில் அப்படியே ஆர் பிடப்பட்டிருப்பது ஈண்டு நுனுகி நோக்கி மகிழ்தற்கு ಈ மற்றும், சங்கப் புலவர்கள் - ஆவிரம் త్థల్లో கொடுத்துள்ள சிறப்பினை ஈண்டு మిrు ತ್ಗಿ "ஆவிரம் பூ அழகிய பொன்மலராம்: ఇat விகவதாம்; நெருப்புப்போல் தகதக' என ஒளிவிட்டு விளங்கு தொல்காப்பியத்துக்கு முன் 119 வதாம்; விரிந்து மலர்ந்திருக்குமாம். இந்தக் கருத்துக்களை “அடர்பொன் அவிர் ஏய்க்கும் ஆவிரங்கண்ணி', 'பொல (பொன்) மலர் ஆவிரை", ‘அணியலங்கு ஆவிரைப் பூ" என்னும் கலித்தொகைப் ப ா ட ல் பகுதிகளாலும், "பொன்னேர் ஆவிரைப் புதுமலர்' என்னும் குறுந் தொகைப் பாடல் பகுதியாலும், விரிமலர் ஆவிரை' என்னும் குறிஞ்சிப் பாட்டுப் பகுதியாலும், அழல் விளக்கத்துக் களரி யாவிரைக் கிளர் பூங்கோதை" என்னும் அகநானுாற்றுப் பாடற் பகுதி யாலும், பிறவற்ருலும் நன்கறியலாம். இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள இந்தச் சிறப்பினை ஈண்டு விதந்து எடுத்துக் காட்டியதன் நோக்கம், மக்களைக் கவரும் ஆற்றலும் தகுதியும் ஆவிரம் பூவுக்கு மிகுதியாக உண்டு என்பதை அறிவிப் பதேயாம். இவ்வாருக, மக்களைக் கவரும் தகுதியுடைய ஆவிரம் பூக்களின் தொகுப்பாகிய களரியாவிரை' என்னும் மாலையின் பெயர், மக்களைக் கவர்ந்த பயனுள்ள பாடல்களின் தொகுப்பாகிய நூலுக்கு வைக்கப்பட்டது. பல மொழிகளிலும் உள்ள தொகை நூல்களுக்கு மாலை” என்னும் பெயர் சூட்டப்பட்டிருப்பதைப் பற்றி நாம் முன்னரே பேசியுள்ளோம். தொகை நூலைக் குறிக்கும் "ஆந்தாலஜி (Anthology) என்னும் ஆங்கிலச் சொல்லின் அடிப்படைச் சொல்லாகிய "ஆந்தொலொழியா என்னும் கிரேக்கச் சொல், 'மலர்களின் தொகுப்பு’ என்னும் பொருள் உடையது என்பதும் நாம் முன்னரே அறிந்த செய்தி. முதல் கிரேக்கத் தொகைநூலுக்கு மாலை (Garland of Meieager) என்னும் பெயர் கொடுக்கப்பட்டிருப்பதும் நாம் முன்பே அறிந்ததொன்று. எனவே, அன்று மக்களை மிகவும் கவர்ந்த ஆவிரம் பூ மாலைய்ைக் குறிக்கும், களரியாவிரை' என்னும் பெயரைக் கொண்ட தமிழ் நூல் ஒரு தொகை நூலாகத் தான் இருக்கவேண்டும் என்ற முடிவுக்கு நாம் வரலாம். தெரிந்ததிலிருந்து தெரியாததற்குச் செ ல் லு த ல்’ என்னும் உள நூல் முறைப்படி ஒன்று காண்பாம். இன்று பாவேந்தர் பாரதிதாசனுடைய பாடல்களின் தொகுப்பு நூல் ஒன்றுக்கு 'முல்லேக்காடு என்னும் பெயர் தரப்பட்டுள்ளது.