பக்கம்:தமிழ்ப்புலவர் சரித்திரம்.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

466 . வி. கோ: சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய முதற் ஆண்டு போதாலும் தம் இருமுது' குரவ்ரையும் : இழக்கும் துர்பாக்கியம் சம்பவித்தது. சம்பவித்து மென் ? நம் கவிராயர்க்கு அச்சிறுவயதிலேயே செந்தமிழணங்கின் மாட்டுள்ள அன்பானது வாரியென ஆரவாரித்து நம்புல. வரை வளைந்து கொண்டது. உடனே நம் புலவர் தமது நீர்காடு நீங்கித் தம்மை: நீங்காது பின் றொடரும் அன்பு வெள்ளங் கடப்பதற்குப் * புகலான t புணை தேடப் புறப்படுவான் தொடங்கித் தருமபுர ஆதீனத்திற்குச் சென்று ஆண்டு வசித்த தம்பிரான் மாரிடம் ஓரற்புத நாவாய் பெற்றுத் தமது அற்புக் கடலைக் கடக்கப் புகுந்தார். இவரது குசை நுனி யதனினுங் கூரிய மதி” யினைக்கண்ட தம்பிரான் மார் இவர்பான். மிகப் பிரீதியுற்றுக் கீர் வாண திராவிடாந்திர பாஷைகளி லவரை வல்லுநராக்கினதோடே நின்று விடாமல் சைவ சித்தாந்தத் தெய்வ நன் னூலை'யும், அவற்றின்கணுள்ள இரகசியப் பொருள்களையும், ஐயந்திரிபற லோதுவித்தார்கள். இவர் விசேஷ மாகத் தமிழிலக்கணங் கற்றதெல்லாம் தருமபுர மடத்தைச் சேர்ந்த அம்பல வாணாக் கவிராயரிடத்தென்று சொல்லுப். இவர் வேளாளர் குலத்தைச் சேர்ந்தவர், இவர் சித்தாந்த சைவர் மரபின ராயினும் வைணவத்திலும் மதிக்கப் பிரீதியுள்ள வர். மேலுமிவர் தாம் தருமபுர ஆதீனத்திற் கல்வி கற்றபின் அம்மடத் தம்பிரான்மார் இவரைத் துறவியாக்குவான் முயன்றும், நம்புலவர் அவர்கள் கருத்திற்கு இசையா ராய்த் திரும்பிவிட்டனர். பிறகு இவர் தமக்கு முப்பதாவது வயதிலே விவாகஞ் செய்துகொண்டு இல்லறம் நன்கு நடத்தற் பொருட்டுக் காசுக் கடையொன்று ஸ்தாபித்துக் கொண்டும் இராமாயணப் பிரசங்கஞ் செய்து கொண்டும் வந்தனர். இனி யிதுகிடக்க, நங்கவிராயர் தமக்கு 42-வது வயதில் புதுச்சேரிக்கு வியாபார சம்பந்தமாய்ப் புறப்பட்டு ஓரிரவு சீகாழி மடத்திற்றங்கின தாகவும், ஆங்கு இவருடைய சகபாடியாகிய சிதம்பரம் பிள்ளை யென்பார் தாம் பாடு வான் தொடங்கிப் பின் முடிவு பெறாதிருந்த புள்ளென்னும் ஒருவித பிரபந் தத்தை முடிக்கும்படி வேண்டிக்கொண்டதாகவும், அவருடைய வேண்டு கோட் கிணங்கி நம்புலவர் அதனைப் பூர்த்திசெய்து ஒரு வேலையாளிடம் கொடுத்துவிட்டுத் தமது நண்பரிடஞ் சொல்லாது புதுச்சேரிக்குப் போய்விட்ட தாகவும், இது கேள்வியுற்ற சிதம்பரம் பிள்ளை யவர்கள், பள்ளினைப்பார்த்து மகிழ்ந்து நம் புலவரைத் தமக்குச் சமீபத்திலேயே யிருத்திக்கொள்ளும் நோக் கத்தினராய்ப் புதுச்சேரிக்குப்போன நண்பர் வருமுன் ஒரு வீடு கட்டி, நமது கவிராயருடைய சமுசாரத்தினை யதன்கண் இருக்கும்படி செய்ததாகவும், புதுச்சேரியினின்றும் போந்த புலவரை யிட்டுக்கொண்டு அப்புது வீட்டிற்குச் சென்றதாகவும், ஆண்டு நம் புலவர் தம் மனைவி முதலாயினோரைக்' கண்ணுற் றுக் களிகூர்ந்து, அவ்விடத்திலேயே தம் பின் னாள் முழுவதும் தங்கிவிட்ட

  • புகலான - அடைக்கலமான. t புணை - தெப்பம்"