பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

9


ஒரு கவளம் சோற்றுக்கு நாய் பல்லை இளிப்பது போல,

ஒரு கழிச்சலில் உட்கார்ந்து மறு கழிச்சலில் மல்லாந்து போக, 5920


ஒரு காசு அகப்படுகிறது குதிரைக் கொம்பு.

ஒரு காசு என்ற இடத்தில் அழுகிறான்.

ஒரு காசுக்கு மூக்கு அரிந்தால் ஒன்பது காசு கொடுத்தால் ஒட்டுமா?

ஒரு காசுக்கு மோர் வாங்கி ஊரெல்லாம் தானம் பண்ணினாளாம்.

ஒரு காசு கொடாதவன் ஒரு வராகன் கொடுப்பானா? 5925


ஒரு காசு பேணின் இரு காசு தேறும்.

ஒரு காதில் வாங்கி ஒரு காதில் விடுவது.

ஒரு கால் செய்தவன் இரு கால் செய்வான்.

ஒரு கால் பார்த்தால் புஞ்சை; இரு கால் பார்த்தால் நஞ்சை,

ஒரு காலிலே நிற்கிறான். 5930


ஒரு காலை செய்த தச்சன் மறு காலும் செய்வான்.

ஒரு குட்டியும் பெட்டையும் போல.

ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை.

ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம் போதும்.

ஒரு குண்டிலே கோட்டை பிடிக்கலாமா? 5935 :

(முடியுமா?)


ஒரு குருவி இரை எடுக்க ஒன்பது குருவி வாய் திறக்க, :(திறக்குமாம்.)

ஒரு குலைத் தேங்காய்.

ஒரு குளப்படி நீரைக் கண்டு திரைகடல் ஏங்குமா?

ஒரு கூடை முடைந்தவன் ஒன்பது கூடை முடைவான்.

(கூடு, கூண்டு.)

ஒரு கூடைக் கல்லும் தெய்வமானால் கும்பிடுகிறது எந்தக் கல்லை? 5940


ஒரு கூடைச் செங்கல்லும் பிடாரி.

ஒரு கூன் சர்க்கரையா ஒத்து வாழ்.

ஒரு கை சத்தம் எழுப்புமா?

ஒரு கை தட்டினால் ஓசை கேட்குமா?