பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

131


குடித்தனம் என்று பண்ணினால் நன்மையும் வரும்; தீமையும் வரும். 8585


குடித்தனம் செழித்தால் துரைத்தனம் செழிக்கும்.

குடித்தனம் மேலிட வேண்டிப் பிடாரியைப் பெண்டு வைத்துக் கொண்டான்.

குடித்தனமே துரைத் தனம்.

(குடித்தனமோ, துரைத்தனமோ?)

குடிப்பது கூழ், ஏறுவது தந்தப் பல்லக்கு.

குடிப்பது கூழ், கொப்புளிப்பது பன்னீராம். 8590


குடிப்பது மல ஜலம்; கொப்புளிப்பது பன்னீர்.

குடிப் பெண் வயிறு எரிய, கொடிச் சீலை நின்றெரிய.

குடி போகிற வீட்டுக்கு வரச் சொன்ன கதை.

குடி போன வீட்டிலே வறட்டு நாய் காத்தது போல.

குடி மக்கள் துரைத்தனம் செய்கிறது போல். 8595


குடி மதம் அடிபடத் தீரும்.

(அடிபட்டால்.)

குடியனும் வெறியனும் அடிபடாமல் குணப்பட மாட்டார்கள்.

குடியனும் வெறியனும் சரி.

குடியாத வீடு விடியாது.

குடியில் பிறந்து குரங்காட்டம் ஆடுகிறான். 8600


குடியில் பிறந்து செடியில் விழுந்தான்.

குடியில் பெண் வயிறு எரிந்தால் கொடியிற் சேலை நின்று எரியும்.

குடியில்லா ஊரில் ஒற்றைப் பணக்காரன் வர்த்தகன்.

குடியிலே குரங்கானாலும் கொள்.

குடியும் கெட்டுக் குடிக்கிற ஓடும் கெட்டது. 8605


குடியும் சூதும் குடியைக் கெடுக்கும்.

குடியே குடியைக் கெடுக்கும்.

குடி வரி உயர்த்திக் கொள்ளை அடிக்காதே.

குடி வைத்த வீட்டில் கொள்ளி வைக்கலாமா?

குடி வைத்துக் கொண்டாயோ? கொள்ளி வைத்துக் கொண்டாயோ? 8610


குடு குடு என்று ஓடிக் குடுமியைச் சிரைத்தானாம்.

(ஓடி வந்தானாம்.)