பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

தமிழ்ப் பழமொழிகள்


குடும்பத்தில் இளையவனும், கூத்தாடியில் மூத்தவனும் உதவார்.

(கூத்தாடியில் சோம்பேறியும்.)

குடும்பா என்றால் கொத்து வேண்டாம்.

குடுமிக்கு ஏற்ற கொண்டை.

(தக்க.)

குடுமித் தலையின் வீறாப்பைக் கொண்டைத் தலையா பாரடா. 8615

(பார்த்தாயா?)


குடுமித் தலையும் மொட்டைத் தலையும் கூடுமா?

குடுமித் தலையும் மொட்டைத் தலையுமாய்க் கட்டுகிறது.

குடுமியானுக்குக் குறுணி கொடுக்கிறதா என்று புற்றின்மேல் படுத்த கதை.

குண்டன் கூடினால் சண்டை வரும்; குமரி கூடினால் நகர் பாழாகும்.

குண்டா கரணம் போட்டாலும் பிண்டச் சோற்றுக்கு வழி இல்லை. 8620


குண்டி அறுந்த பருந்து போல.

குண்டி எத்தனை கோணல் கோணினாலும் சுமை வீட்டில் போய்ச் சேர்ந்தால் சரி.

குண்டி எத்தனையோ குளம்; குளம் எத்தனையோ குண்டி.

குண்டி எத்தனையோ துணிகளைக் கண்டது; குந்தாணி எத்தனையோ உரலைக் கண்டது.

குண்டி காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும். 8625


குண்டித் துணியும் குடிக்கக் கூழும் இன்றிக் கண்டிக்குச் சென்றும் கவலையே கொண்டாற் போல்.

குண்டி மறைக்கத் துணி இல்லை; கொண்டை பூவுக்கு அழுகிறதாம்.

குண்டி மினுக்கி அரிவாள் தீட்டுமுன் உள்ள பதநீர்கள் ஆகிவிடும்.

குண்டி வற்றினால் குதிரையும் வைக்கோல் தின்னும்.

குண்டு குண்டு என்று ஓடினாலும் குட்டி ஆனை குதிரை ஆகுமா? 8630


குண்டு சட்டிக்குள்ளே குட்டி யானை நுழைந்தாற் போல்.

குண்டு சட்டியிலே குதிரை ஓட்டுகிறான்.

(ஓட்டுகிறது.)