பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

133


 குண்டுணிக் குப்பன்.

குண்டுணி சொல்கிறவர்களுக்கு இரு நாக்கு; கட்டு விரியனுக்கும் இரு நாக்கு.

(கடு நாக்கு.)

குண்டுப் பெருச்சாளியும் வண்டும் போல. 8685


குண்டு பட்டுச் சாகாதவன் வண்டு கடித்துச் செத்தானாம்.

குண்டு போன இடத்தில் குருவி நேர்ந்தது.

குண்டும் இல்லாமல் மருந்தும் இல்லாமல் குருவி சுடலாமா?

குண்டு மாற்று. குழி மாற்று.

(கச்சிதமான அளவு.)

குண்டை இணைத்தால் குடி இளைக்கும். 8640


குண்டை சாவு கொடுத்தவனும் பெண்டைச் சாவு கொடுத்தவனும் ஒன்று.

குண்டை பலத்தால் குடி பலக்கும்.

குண்டை பலமோ, குடி பலமோ?

குண்டை பெருத்தால் குடி பெருக்கும்.

(விளங்கினால் விளங்கும்.) .

குண்டோட்டம் குதிரை ஓட்டம். 8345


குணக்கு எடுக்க நாய் வால் நிமிருமா?

(குணக்கெடுக்க நாய் வாலைக் கூடுமா?)

குணச்சிறப்பைக் குலத்தில் பார்.

குணத்திற்கு அழுகிறதா? பிணத்திற்கு அழுகிறதா?

குணத்தைச் சொல்; குலத்தைச் சொல்லாதே.

குணத்தை மாற்றக் குரு இல்லை. 8650


குணம் இல்லாக் கல்வி பாழ்.

குணம் இல்லா வித்தை எல்லாம் அவித்தை.

குணம் உள்ள இடத்திலே மணம் உண்டு.

(நிறைவு உண்டு.)

குணம் உற்றவன் மணம் உற்றவன்; குணம் அற்றவன் மணம் அற்றவன்.

குணம் கெட்ட இடத்திலே குன்றியும் இராது. 8655


குணம் கெட்ட மாப்பிள்ளைக்கு மணம் கெட்ட பணியாரம்.

குணம் கெட்டால் குரங்கு.