பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஓ

ஓ கெடுவானுக்கு வாழ்க்கைப்பட்டு ஒட்டமே ஒழிய நடை இல்லை.

(ஒ கெடுப்பானுக்கு, ஓ கொடுப்பானுக்கு.)

ஓங்கி அறைந்தால் ஏங்கி அழச் சீவன் இல்லை.

ஓங்கில் அறியும் உயர்கடலின் ஆழம்; பாங்கி அறிவாள் தன் பர்த்தாவின் வலிமை.

ஓங்கின கை நிற்காது.

ஓங்கின கோடரி நிற்காது. 6145

ஓங்கு ஒன்று: அடி இரண்டு.

ஓசிக்கு அகப்பட்டால் எனக்கு ஒன்று; எங்கள் அண்ணனுக்கு ஒன்று

ஓசை காட்டிப் பூசை செய்.

ஓசை பெறும் வெண்கலம்; ஓசை பெறாது மண்கலம்.

ஓட்டத்துக்குப் பாக்குப் பிடிக்கிறான். 6150

ஓட்டம் உள்ளவரை ஆட்டமும் அதிகம்.

ஒட்டமும் ஆட்டமும் உடம்புக்கு நல்லது.

ஓட்டி ஓட்டி மிளகு அரைக்கப் பாட்டி வந்தாளாம்; பையனுக்குச் சோறு போடக் குட்டி வந்தாளாம்.

ஓட்டின சீமாள் ஓட்டினான்; பழமுள்ள காட்டில் ஓட்டினான்.

ஓட்டுகிறவன் சரியாய் இருந்தால் எருது மச்சான் முறை கொண்டாடாது. 6155

ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.

ஓட்டைக் குடத்திலும் சர்க்கரை நிற்கும்; கருப்பட்டியிலும் கல் இருக்கும்.

ஓட்டைக் குடத்திலேதான் சர்க்கரை இருக்கும்.

ஓட்டைக் கோயிலுக்குச் சர்க்கரை கசக்குமா?

(ஓட்டைக் கோதிலுக்கு.)