பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

தமிழ்ப் பழமொழிகள்


ஓட்டைச் சங்கு ஊது பரியாது. 6160

(சங்கால் ஊத முடியாது.)

ஓட்டைச் சட்டி ஆனாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி.

(வேக உதவும்.)

ஓட்டைத் தோண்டியும் அறுந்து போன தாம்புக் கயிறும் சரி.

(தோண்டிக்கு.)

ஓட்டை நாழிக்குப் பூண் கட்டுவது போல.

(கட்டி ஆவதென்ன?)

ஓட்டைப் பானைச் சர்க்கரை கசக்குமா?

ஓட்டைப் பானையில் உலையிட்டாற் போல். 6165


ஓட்டைப் பானையில் கொழுக்கட்டை வேகுமா?

ஓட்டைப் பானையில் சர்க்கரை இருக்கும்.

ஓட்டைப் பானையில் நண்டை விட்டாற் போல.

ஓட்டைப் பானையில் விட்ட தண்ணீர் போல,

ஓட்டை மணி ஆனாலும் ஓசை நீங்குமா? 6170


ஓட்டை மதகிலே தண்ணீர் போனால் தோட்டிக்கு என்ன வாட்டம்?

ஓட்டை வீட்டிலே மூத்திரம் பெய்தால் ஒழுக்கோடு ஒழுக்கு.

ஓடக்காரனிடம் கோபித்துக் கொண்டு ஆற்றோடு போன மாதிரி.

ஓடம் கட்டின தூலம்.

ஓடம் கடந்தால் ஓடக்காரனுக்கு ஒரு சொட்டு. 6175


ஓடம் கவிழ்த்த பிரமசாரியைப் போல.

ஓடம் வண்டியிலே; வண்டி ஓடத்திலே,

(வண்டி மேலே, ஓடத்து மேலே.)

ஓடம் விட்ட ஆற்றிலும் அடி சுடும்.

(ஆறும்.)

ஓடம் விட்ட ஆறே அடி சுடும் என்பது அறியாயா?

ஓடம் விட்ட இடம் அடி சுடும்; அடி சுட்ட இடத்தில் ஓடப்படும். 6180


ஓடம் விட்டு இறங்கினால் ஓடக்காரனுக்கு ஒரு சொட்டு,

ஓட மாட்டாதவன் திரும்பிப் பார்த்தானாம்.

ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறியே ஆக வேண்டும்.