பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

231


சின்னச் சின்னப் பேச்சு,சிங்காரப் பேச்சு, வன்ன வன்னப் பேச்சு

மெத்த வழக்கமான பேச்சு.

சின்னச் சின்னப் பேச்சும் சிரித்தாற் போல வார்த்தையும்.

சின்னச் சின்ன வார்த்தை, சிங்கார வார்த்தை,

சின்னச் சொல்லும் சிங்காரச் சொல்லும்,

சின்னதாகப் பண்ணினாலும் பண்ணுவான்; பெரிதாகப்

பண்ணினாலும் பண்ணுவான். 10880


சின்னப் பாம்பு ஆனாலும் பெரிய தடி கொண்டு அடி.

(பெரிய கொம்பால்.)

சின்னப் பிணம் ஆனாலும் பெரிய பிணம் ஆனாலும் சங்கு ஊதிக்குக் கால் பணம்.

(முக்கால் பணம்.)

சின்னப் பிள்ளைக்கு வாழைப் பழத்தைக் கொடுத்து ஏமாற்றினாற்போல.

சின்ன மீன் பெரிய மீனுக்கு இரை. . சின்னவனுங்கு இனியது காட்டாதே, சேம்பில் புளியிட்டு ஆக்காதே. 10885


சின்ன வீட்டில் நடந்த சமாசாரம் சீமந்தத்தில் தெரியும்.

(வீட்டில் செய்தது தெரிந்து போயிற்று.)

சின்ன வீட்டுச் சேதி அம்பலத்திலே வரும்.

சின்ன விடாம், சிறு கதவாம், அரக்கு முத்திரையாம், வையாபுரியான் கலகம் இட வைத்தது வைத்தாற் போல.

சின்னாரண்ணன் கோவிலிலே சிலை பண்ணி வைத்தாற்போல்.

சினத்தால் அறுத்த மூக்குச் சிரித்தால் வருமா? 10890

(சினந்த போது; சிரித்தபோது.)


சினத்தாலும் இனத்தோடே.

சினத்தைப் பேணில் தவத்துக்கு அழகு.

(அழிவு.)

சினந்தவரை இனம் தழுவாது.

சினந்தாலும் சீர் அழியப் பேசாதே.

சினந்திருந்தார் வாசல் வழி சேரவேண்டாம். 10895


சினம் மீறினால் இனம் தெரியாது.

சிறுக்குச் சின்னம்மா, சிங்காரப் பொன்னம்மா.