பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

51


கணக்கன் கணக்கு அறிவான்; தன் கணக்கைத் தான் அறியான். 6805

கணக்கன் கணக்கைத் தின்னா விட்டாலும் கணக்கனைக் கணக்குத் தின்று விடும்.

கணக்கன் கெட்டால் பள்ளிக்கூடம்.

கணக்கன் கணக்கைத் தூக்கி; கண்டவனெல்லாம் செருப்பைத்தூக்கி.

கணக்கன் மனைவி கடுக்கன் அணிந்தாளென்று காரியக்காரன் மனைவி காதை அறுத்துக் கொண்டாளாம்.

கணக்கன் வீட்டுக் கல்யாணம் விளக்கெண்ணெய்க்குக் கேடு. 6810


கணக்கனுக்குக் கைக் கூலி கட்டிக் குடியிருக்கக் கடன் என்றாராம்.

கணக்கனுக்குப் பட்டினி உடன் பிறப்பு.

கணக்கனுக்கு மோட்சம் இல்லை; ஒட்டனுக்கு நரகம் இல்லை.

கணக்கனைக் கண்ட இடத்தில் கண்ணைக் குத்து.

கணக்கனைப் பகைத்தாயோ? காணியை இழந்தாயோ? 6815


கணக்கனோ, குணக்கனோ?

கணக்கிலே கயிறு கோத்திருக்கிறது.

கணக்கு அதிகாரத்தைப் பிளக்கும் கோடாலி.

கணக்கு அரைக்கால், முக்காலே அரைக்கால், கணக்கன்

பெண்டாட்டி தாலி அறுத்தாள்.

(கணக்கன் முக்காலே அரைக்கால்.)

கணக்கு அறிந்த பிள்ளை வீட்டில் இருந்தால் வழக்கு அறாது. 6820


கணக்கு அறிவான், காலம் அறிவான்.

கணக்குக் குஞ்சையும் காக்கைக் குஞ்சையும் கண்ட இடத்திலே கண்ணைக் குத்து.

கணக்கிலே கயிறா கோத்திருக்கிறது?

கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.

கணபதி பூஜை கைமேலே பலன். 6825


கணவன் இல்லாத கற்புடைய பெண்ணின் கட்டழகு பயன் படாதது போல.

கணவனுக்கு மிஞ்சித் தெய்வம் இல்லை.