பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

தமிழ்ப் பழமொழிகள்


கரிக்குருவியார் கண்ணுக்குக் காக்கையார் பொன்னொத்துத் தோன்றும்.

(சீவக சிந்தாமணி.)

கரிச்சுக் கொட்டினால் எரிச்சல் வராதா?

கரிசனப்பட்ட மாமியார் மருமகளைப் பார்த்து ஏக்கம் உற்றாளாம்.

கரிசனம் உள்ள கட்டியம்மா, கதவைத் திற பீப்பெய்ய.

கரிசனம் உற்ற சிற்றாத்தே, நீ கம்பங்கொல்லையில் வாடி கட்டி அழ. 7010

கரிசனம் எல்லாம் கண்ணுக்குள்ளே; வஞ்சனை எல்லாம் நெஞ்சுக்குள்ளே.

கரியாய் உமியாய்க் கட்டை விளக்குமாறாய்.

கரியை வழித்து முகத்தில் தடவினாள்.

கரி விற்ற பணம் கறுப்பாய் இருக்குமா?

(விற்ற காசு கரியாய் இருக்குமா? கறுக்குமா?)

கரு இல்லாத முட்டையும் குரு இல்லாத வித்தையும். 7015

(சிஷ்யனும்.)

கருக்கலில் எழுந்தாலும் நறுக்கென்று சமைக்க மாட்டாள்.

கருக்கலில் கயிற்றைப் பாம்பு என்ற கதை.

கருக்கி உருக்கி நெய் வார்த்தாலும் கண்ட நியாயந்தான் சொல்லுவான்.

கருங்கண்ணி பட்டாலும் கரையான் கண்ணாலும் திரும்பிப்பாரான்.

கருங்கல்லில் ஈரம் ஏறாத் தன்மை போல. 7020

கருங்கல்லில் எழுதிய எழுத்தைப் போல.

கருங்கல்லிலே நார் உரிப்பான்.

கருங்காலி உலக்கைக்கு வெள்ளிப் பூண் கட்டினது போல.

கங்காலிக் கட்டைக்கு வாய் நாணாத கோடாலி இளவாழைத்தண்டுக்கு வாய் நாணும்.

(கோணாத கோடாலி, கதலித்தண்டுக்குக் கோணி விடும்.)

கருங்குரங்கு போல மலங்க விழிக்காதே. 7025

கருங்கொல்லன் உலைக்களத்தில் நாய்க்கு என்ன வேலை?

கருடன் இடம் போனால் எவன் கையில் பொருளும் தன் கையில் சேரும்.

(பிறன் கைப்பொருள். தன் கைப்பொருள்.)