பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

73


கழுத்திலே கரிமணி இல்லை; பெயர் முத்துமாலை.

கழுத்திலே குத்துகிறது கண் கெட்டவனுக்குத் தெரியாதா?

கழுத்திலே தாலி ஏறினால் நாய்மாதிரி வீட்டில் கிடக்க வேண்டியது தானே?

கழுத்துக்குக் கருகு மணி இல்லை; பெயர் முத்தாபரணம்.

கழுத்திலே தாழி வடம்; மனத்திலே கரவடம். 7300

(அவகடம்.)


கழுத்து அறுக்கக் கத்தி கையில் கொடுத்தது போல.

கழுத்துக்குக் கீழே போனால் கஷ்டம்.

கழுத்துக்குமேல் கத்தி வந்திருக்கச்சே செய்ய வேண்டியது என்ன?

கழுத்துக்குமேல் சாண் போனால் என்ன? முழம் போனால் என்ன?

கழுத்து மாப்பிள்ளைக்குப் பயப்படாவிட்டாலும் வயிற்றுப் பிள்ளைக்குப் பயப்பட வேண்டும். 7305


கழுத்து வெளுத்தாலும் காக்கை கருடன் ஆகுமா?

கழுத்தைக் கொடுத்தாச்சு: கைவிலங்கு போட்டாச்சு; பத்து நாள் சிறையில் பதுங்கிக் கிடக்க வேணும்.

கழுத்தைக் கொடுத்தாலும் எழுத்தைக் கொடாதே.

கழுதை அறியுமா, கந்தப்பொடி வாசனை?

(கர்ப்பூர வாசனை.)

கழுதை உழவுக்கு வராது. 7310


கழுதை உழுகிறவன் குடியானவனா?

கழுதை உழுது கம்பு விளையுமா? கண்டியான் உழுது நெல் விளையுமா?

கழுதை உழுது குறவன் குடி ஆனானா?

கழுதை உழுது வண்ணான் குடி ஆனானா?

கழுதைக் காமம் கத்தினால் தீரும்; நாய்க் காமம் அலைந்தால் தீரும். 7315


கழுதைக்கு உபதேசம் காதில் ஏறுமா?

(உபதேசம் செய்தால்.)

கழுதைக்கு உபதேசம் காதிலே ஓதினாலும் காள் காள் என்ற புத்தியை விடாது.