பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

75

 கழுதைப் புட்டை ஆனாலும் கைநிறைய வேண்டும்.

(விட்டை. லத்தி.)

கழுதைப் புண்ணுக்குத் தெருப்புழுதி மருந்து.

கழுதைப் பொதியில் உறை மோசமா?

(மாறாட்டமா?)

கழுதைப் பொதியில் ஐங்கலம் மாறாட்டமா? 7340


கழுதை புரண்ட களம் போல.

கழுதை புரண்டால் காடு கொள்ளாது.

கழுதை புவியில் இருந்தால் என்ன? பாதாளத்தில் இருந்தால் என்ன?

கழுதை மயிர் பிடுங்கித் தேசம் கட்டி ஆள்கிறதா?

கழுதை மூத்திரத்தை நம்பிக் கட்டுச் சோற்றை அவிழ்க்கிறதா? 7345


கழுதைமேல் ஏறி என்ன? இறங்கி என்ன?

கழுதைமேல் ஏறியும் பெருமை இல்லை: இறங்கியும் சிறுமை இல்லை.

கழுதையாகப் போய்க் கட்டெறும்பாய்த் திரும்பி வந்தது.

கழுதையாய்ப் பிறந்தாலும் காஞ்சீபுரத்திலே பிறக்க வேணும்.

கழுதையின் எறியைக் கழுதைதான் தாங்க வேணும். 7350


கழுதையின் காதிலே கட்டெறும்பை விட்டாற் போல.

(பிட்டத்தில்.)

கழுதையும் குதிரையும் சரி ஆகுமா?

கழுதையும் நாயும் சேர்ந்து கத்தினாற்போல.

கழுதையும் பணமும் சேர்ந்து வந்தால் பணத்தை வாங்கிக் கொண்டு கழுதையைத் துரத்தி விடு.

கழுதையைக் கட்டி ஓமம் வளர்த்தது போல. 7355

(வளர்க்கலாமா?)


கழுதையைக் கொண்டு உழுது குறவன் உழவன் ஆனான்.

கழுதையையும் குதிரையையும் பிணைத்தாற் போல.

கழுதை லத்தி கை நிறைய.