பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

85

 கறந்த பால் முலைக்கு ஏறுமா?

(காம்புக்கு ஏறுமா? முலைப் புகா.)

கறந்த பாலும் எச்சில்; பிறந்த பிள்ளையும் எச்சில்.

கறந்த பாலைக் காக்கையும் தொடாது. 7555


கறந்த பாலைக் காய்ச்சாமல் குடித்தால் காச வியாதி தானே வரும்.

(காச நோய்.)

கறந்த மேனியாய்ப் பேசுகிறது.

கறவை உள்ளான் விருந்துக்கு அஞ்சான்.

கறவை மாடு கண்ணுக்குச் சமானம்.

கறிக்கு அலைந்தவன் பீர்க்குப் போடு. 7560


கறிக்கு இல்லாத வாழைக்காய் கட்டித் தொங்குகிறதாம்.

கறிக்கு இல்லாத வாழைக்காய் பந்தலிலே கட்டித் தொங்கிற்றாம்.

(தொங்கவோ? பந்தலில் தோரணம் கட்டினானாம்.)

கறிக்கு உழக்கு நெய் வார்த்தாலும் கண்ணாரக் கண்டதைச் சொல்.

கறிக்குக் கலநெய் வார்த்தாலும் கணக்கோடே வார்க்க வேண்டும்.

கறிக்குக் கறி நெய் விட்டாலும் கணக்குக் கணக்காய் இருக்க வேணும். 7565


கறி மீனுக்காகக் குளத்தை வெட்டி விடுவதா?

கறியிலே உயர்த்தி கத்தரிக்காய்; உறவிலே உயர்த்தி சின்னாயி.

கறியிலே கத்தரிக்காய்; உறவிலே சிற்றம்மை.

கறி வேப்பிலை கண்போல்.

(கறி வேப்பிலை கன்று போல்.)

கறுத்தது எல்லாம் தண்ணீர்: வெளுத்தது எல்லாம் பால். 7570


கறுத்த பார்ப்பானையும் வெளுத்த பறையனையும் நம்பாதே.

கறுத்த மூஞ்சியும் வெளுத்த சோறும்.

கறுப்பாய் இருந்தாலும் சந்திரன் சந்திரன்தான்.

(கறை இருந்தாலும்.)

கறுப்பிலும் குறிப்பு அழகு.

கறுப்புக்கு நகை பூட்டிக் கண்ணாலே பார் 7575