பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204

தமிழ்ப் பழமொழிகள்



பாடி, குறட்டூர், பாழாய்ப் போன அம்பத்தூர்.

பாடிப் பாடிக் குத்தினாலும் பதரில் அரிசி வராது.

(இல்லை)

பாடு அறிந்து பாடு பட்டால் பாழும் காடும் நெல் விளையும்.

பாடு இல்லாமல் பயன் இல்லை.

பாடு என்றால் பாணனும் பாடான். 15910


பாடு பட்ட அம்மாளுக்குப் பழைய சேலை; கூர் கெட்ட அம்மாளுக்குக் குறியோடு சேலை,

பாடு பட்ட கட்டாடிக்கு அள்ளிப் போடு பூசணிக்காயை.

(கட்டாடி வண்ணான் - யாழ்ப்பாண வழக்கு.)

பாடு பட்ட கட்டாடிக்குப் பூசணிக்காயும் சோறும்.

(யாழ்ப்பாண வழக்கு.)
(அள்ளிப் போடு பூசணிக்காயை.)

பாடு பட்ட நாய்க்குக் கேடு வந்ததைப் போல.

பாடு பட்டவன் பட்டத்துக்கு இருப்பான். 15915


பாடு பட்டால் பலன் இல்லை.

பாடு பட்டால் பலன் உண்டு.

பாடு படாமற் போனால் பலன் இல்லாமற் போகும்.

பாடு, பாடு என்றால் பறையனும் பாடமாட்டான்; தானாகப் பாடினால் தலை தெறிக்கப் பாடுவான்.

பாடும் இல்லை; பலனும் இல்லை. 15920


பாடும் புலவர் கையில் பட்டோலை ஆனேனே!

பாடை ஏறினும் ஏடது கைவிடேல்.

பாடைக்குப் பிணம் பற்றாமல் போக.

பாடையிலே பார்க்க வேணுமென்றால் சாகையிலே வா.

பாண்ட மங்கலம், பரமத்தி, பையனைக் கண்டால் பிரம்ம ஹத்தி. 15925


பாண்டவர்கள் தெரியாதா? கட்டில் கால் போல மூன்று பேர் என்று இரண்டு விரலைக் காட்டி, ஒரு கோடு போட்டு, அதையும் அழித்தானாம்,

பாண்டி பதினாறு

(சிவன்தலம்.)

பாண்டியில் இரண்டு; பட்டரில் இரண்டு.

(அதிவீரராமன், வர துங்கராமன்; சிவஞான முனிவர்; கச்சியப்ப முனிவர்.)