பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

207



பாம்புக்கு மருந்து கேட்கத் தேளுக்குப் மந்திரித்தது போல.

பாம்புக்கு மூப்பு இல்லை.

பாம்புக்கு ராஜா மூங்கில் தடி.

பாம்புக்கு விஷம் பல்லிலே; பரத்தைக்கு விஷம் உடம் பெங்கும். 15985


பாம்பு கடிக்கத் தேளுக்குப் பார்க்கிறதா?

பாம்பு கடித்தாலும் பிழைக்கலாம்; பாக்குக் கடித்தால் பிழைக்க முடியாது.

பாம்புச் செவி.

பாம்பு தன் பசியை நினைக்கும்; தேரை தன் விதியை நினைக்கும்.

பாம்பு தின்கிற ஊரிலே போனால் நடுமுறி நமக்கு என்று இருக்க வேண்டும். 15990

(நடுத்துண்டு, நடுக் கண்டம்.)


பாம்புப் பிடாரனுக்குப் பாம்பாலே சாவு.

பாம்பு பகையும் தோல் உறவுமா?

பாம்பு பசிக்கில் தேரையைப் பிடிக்கும்.

பாம்பு பசியை நினைக்கிறது; தேரை விதியை நினைக்கிறது.

பாம்பு படம் விரித்து ஆடிய தென்று நாங்கூழ்ப் பூச்சியும் தலைதூக்கி ஆடியதாம். 15995


பாம்பும் கீரியும் போல.

பாம்பும் கீரியும் போலப் பல காலம் வாழ்ந்தேன்.

பாம்பும் சாகவேண்டும்; கோலும் முறியக் கூடாது.

பாம்பும் சாகாமல் பாம்பு அடித்த கோலும் முறியாமல் இருக்க வேண்டும்.

(பாம்பும் நோவாமல் கம்பு நோவாமல்.)

பாம்பும் தப்பாமல் கொம்பும் முறியாமல். 16000

(ஒடியாமல்.)


பாம்பும் தன் பசியை நினைந்து தேரையும் தன் விதியை நினைந்த கதை.

பாம்பும் நோவாமல் பாம்பு அடித்த கோலும் நோவாமல் இருக்க வேண்டும்.

பாம்பும் போச்சு; பாம்பு அடித்த கோலும் போச்சு.

பாம்பை அடித்தால் பால்வார்த்துப் புதைக்க வேண்டும்.

பாம்பைத் தின்று பாழ்மூலையில் இருக்கையில் வீம்புக்காய் என்னை வெளியில் இழுக்கிறீரா? 16005