பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

210

தமிழ்ப் பழமொழிகள்



பார்ப்பார் சேவகமும் வெள்ளைக் குதிரைச் சேவகமும் ஆகா.

பாரப்பாரத் தமிழ், பண்டார ஸம்ஸ்கிருதம், பஞ்சாங்கக்காரன் பதார்த்தம் சுத்தம் இல்லை.

பார்ப்பாரப் பிணம் போகிறது பார்.

பார்ப்பாரப் பையன் நண்டு பிடிப்பது போல.

(பிள்ளை.)

பார்ப்பாரிடத்தில் வாயளவிலும் பேசக் கூடாது. 16065


பார்ப்பாரைப் பார்த்துக் கழுதை பரதேசம் போனதாம்.

பாரிப்பாரைப் பார்த்துப் பரதேசம் போவள் போல்.

பார்ப்பான் ஆசை கோணியும் கொள்ளாது.

பார்ப்பான் ஏழையும் பசு ஏழையும் உண்டோ?

(சாதுவும் இல்லை.)

பார்த்துக் கொள்; பிடித்துக் கட்டிக் கொள். 16070


பார்ப்பான் கறுப்பும் பறைச் சிவப்பும் ஆகா.

பார்ப்பான் குளித்தால் பொறுக்க மாட்டான்; பறையன் பல் தேய்த்தால் பொறுக்க மாட்டான்,

(பசியை.)

பார்ப்பான் சாபம், ரிஷி சாபம், ராஜ ஆக்ஞை, ஆசாரி குத்து, வண்ணான் அறை, குயவன் உதை.


பார்ப்பான் சோறு பசிக்கு உதவாது.

பார்ப்பான் தமிழும் வேளாளன் சம்ஸ்கிருதமும் வழவழ, கொழ கொழ {{float_right|16075} }

பார்ப்பான் படி அரிசியை உவப்பான்.

பார்ப்பான் பண்ணையம் கேட்பது இல்லை.

பார்ப்பான் பயிர் இழந்தான்; இரப்பான் சுகம் இழந்தான்.

பார்ப்பான் பருப்பிலே கெட்டான்; துலுக்கன் துணியிலே கெட்டான்.

பார்ப்பான் புத்தி பின்புத்தி, 16080

(செங்கற்பட்டு வழக்கு.)


பார்ப்பான் முறையீடு பசுப் பாய்ச்சலோடு சரி.

(திருபால வாயுடையால் திருவிளையாடற் புராணம் 33:30)

பார்ப்பான் வீட்டுக் கன்றுப் பசுவுக்கு மலை உண்டா என்ற கதை,

பார்ப்பான் வீட்டு வாழையும் குடியானவன் வீட்டுக் கோழியும் உருப்படா.