பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

211



பார்ப்பானில் ஏழையையும் பசுவில் ஏழையையும் நம்பக் கூடாது.

(ஏழை-நோஞ்சான்.)

பார்ப்பானுக்கு இடம் கொடாதே; பறையனுக்கு அம்பலம் கொடாதே. 16085

(இடம்-இடப்பக்கம்.)


பார்ப்பானுக்கு இடம் விடாதே.

பார்ப்பானுக்குப் பல்லில் விஷம்.

பார்ப்பானுக்குப் பிறப்பு; கோவிலிலேயும் சிறப்பு.

(பார்ப்பானுக்குப் பறப்பு, கோவிலுக்கும் சிறப்பு.)

பார்ப்பானுக்குப் புத்தி பிடரியிலே.

பார்ப்பானுக்கு மூத்த பறையன், கேட்பார் இல்லாமல் கீழ்ச்சாதி ஆனான். 16090


பார்ப்பானுக்கு வாய் போக்காதே; ஆண்டிக்கு அதுவும் சொல்லாதே.

பார்ப்பானுக்கு வாய் போக்காதே; தாதனுக்குத் தலை அசைக்காதே; ஆண்டிக்கு அதுதானும் செய்யாதே.

பார்ப்பானுக்கு வாய் போக்கு; ஆண்டிக்கு அதுதானம் இல்லை.

பார்ப்புக்கு இடமும் பள்ளுக்கு வலமும் கொடுக்காதே.

பார்யா ரூபவதீ சத்ரு. 16095


பாரத்வாஜ மத்யஸ்தம்.

(பாரத்வாஜம்-கரிக்குருவி.)

பாரதம் பாட்டு அறாது; ராமாயணம் பொருள் அறாது.

பாரதமாகச் சொல்ல வேனும்.

பாரதமாய் விளைகிறது.

பார புத்தியுள்ள பறவை பதரால் பிடிபட்டது. 16100

(பலரால்.)


பாராத உடைமை பாழ்.

(பாராத பண்டம்.)

பாராத காரியம் பாழ்.

பாராதே கெட்டது பயிர்; ஏறாதே கெட்டது குதிரை; கேளாதே கெட்டது கடன்.

பாரியாள் ரூபவதி பர்த்தாவுக்கு நாற்றம்.

பாருக்கும் உண்டு பாம்புச் செவி, 16105