பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

212

தமிழ்ப் பழமொழிகள்



பாருக்கு ஊடாடப் பாறை, பசுமரத்தின் வேருக்கு ஊடாடி விடும்,

(பார்-கடப்பாறை.)

பாரோர் வாய்ச் சொல் பரமன் வாய்ச் சொல்,

பால் ஆரியனுக்கு; பசு ராமநாத சுவாமிக்கு.

பால் ஆவுடையான் விருந்துக்கு அஞ்சான்.

(ஆஉள்ளவன்.)

பால் ஆனாய் நெய் ஆனாய்ப் போட்டவன் தலைக்குப் பாக்கும் பிடிக்கிறது. 16110


பால் ஆறு உடையான் விருத்துக்கு அஞ்சான்.

பால் ஆன நெஞ்சு எல்லாம் பகை ஆக்கினான்.

பால் ஆனாலும் பசித்துப் புசி.

பால் இருக்கிறது; பாக்கியம் இருக்கிறது; பாலிலே போட்டுக் குடிக்கப் பத்துப் பருக்கைக்கு வழி இல்லை.

பால் உண்ட மேனி பற்றி எரிகிறது; நெய் உண்ட மேனி நெருப்பாய் எரிகிறது. 16115


பால் உண்பவனுக்குப் புளிங்காடி கொடுப்பது போல.

பால் உள்ள மாட்டுக் கன்றே கன்று; பணம் உள்ள வீட்டுப் பெண்ணே பெண்.

(பாக்கியவாள் வீட்டுப் பெண்ணே பெண்.)

பால் உள்ளான் விருந்துக்கு அஞ்சான்.

பால் என்றால் பூச்சி என்கிறான்.

பால் ஏடு ஆகிலும் காலம் அறிந்து உண். 16120


பால் கடலைக் குடிக்கப் பார்க்கும் பூனைபோல்.

(கம்பராமாயணம்,)

பால் கற என்றால் உதட்டிலே புண் என்கிறான்.

பால் குடிக்கப் பாக்கியம் இல்லாதவன் விலைப்பால் வாங்கினானாம்; அதையும் பூனை குடித்ததாம்.

பால் குடிக்கப் பாக்கியம் இல்லாவிட்டால் விலைப் பால் வாங்கினாலும் பூனை குடித்துவிடும்.

பால் குடித்தவனுக்குப் பால் ஏப்பம்; கள் குடித்தவனுக்குக் கள் ஏப்பம், 16125


பால் கொடுத்தவள் நினைவுக்கு மேலே பழம் கொடுத்தவள் நினைப்பு,

பால் சட்டிக்குப் பூனையைக் காவல் வைத்தாற்போல.

பால் சாப்பிட்ட வீட்டில் பகை நினைக்காதே.