பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

213


பால் சுடுகிறது என்று ஊதிக் குடிப்பார்கன்; மோர் சுடுகிறதென்று ஊதிக் குடிக்கிறேன்.

பால் சுண்டினாலும் சுவை சுண்டுமா? 16130


பால் சுவை கன்றிலே தெரியும்; பாக்கியவான் பிள்ளை முகத்திலே தெரியும்.

பால் சோற்றுக்குப் பருப்புக் கறியா?

பால் தொட்டுப் பால் கறக்க வேண்டும்.

பால் நக்காத பூனையும் பரிதானம் வாங்காத அதிகாரியும் உண்டா?

(வாங்காத பிராமணனும்.)

பால் பதக்கும் ஒரு பதக்காய் எண்ணலாம். 16135


பால் பாக்கியம் இல்லாதவன் பணப்பால் கொண்டு வைத்தாலும் இராது.

பால் புளிக்குமா? பழமொழி பொய்க்குமா?

(பழமொழி தவறுமா?)

பால் பொங்கினால் பால் சட்டியிலே.

பால் பொங்கும், பாக்கியம் தங்கும்.

பால் மலையில் மின்னல் மின்னினால் பால் பொங்குகிற நேரத்தில் மழை பெய்யும். 16140

(அந்தியூர் அருகே வழங்கும் பழமொழி.)


பால் வாரித்த சோற்றுக்குத்தான் பழத்தைப் போடுகிறது.

பால் வார்த்தவர்களுக்குப் பகை நினைக்கக்கூடாது.

பால் வார்த்து முழுகுவான்.

பால் வாராவிட்டாலும் பால் வார்த்த பானையைப் பார்.

(யாழ்ப்பாண வழக்கு.)

பால் வெள்ளமாகப் போனாலும் நாய் நக்கித்தான் குடிக்க வேண்டும். 16145


பால் வேண்டாத பூனையும் பழம் வேண்டாத குரங்கும் உண்டா?

பாலகருக்குப் பலம் அழுகை; மச்சத்துக்குப் பலம் உதகம்.

பாலகன் நெஞ்சு எல்லாம் பகை ஆக்கினான்.

பாலகனைப் பறிகொடுத்தவர் மனம்போல,

பாலம் கடக்கிற வரையில் நாராயணா நாராயணா; பாலம் கடந்தால் பூராயணா, பூராயணா. 16150


பாலர் மொழி கேளாதவர் குழல் இனிது யாழ் இனிது என்பார்.

(குறள்.)