பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

214

தமிழ்ப் பழமொழிகள்


பாலருக்கு அழுகை பலம்; மீனுக்குத் தண்ணீர் பலம்.

பாலன் பஞ்சம் பத்து வருஷம் பரியம்.

(யாழ்ப்பாண வழக்கு.)

பாலனும் பால்குடியான்.

பாலான நெஞ்சு எல்லாம் பகை ஆக்கினான். 16155


பால சோதிடம் விருத்த வைத்தியம்.

(ஜோசியம்.)

பாலிலே குளித்துப் பன்னீரிலே கொப்புளிக்கக் கனாக்காண்கிறான்.

பாலுக்கு உண்டான பவிசும் இல்லை; பல்லக்குக்கு உண்டான மவுசும் இல்லை.

பாலுக்குக் காவல் பூனையை வைத்த கதை.

(பாலுக்குக் காவல் பூனையா?)

பாலுக்குச் சர்க்கரையும் கூழுக்கு உப்பும். 16160

(கூழுக்குக் கீரையும்.)


பாலுக்குச் சீனி இல்லை என்பார் கோடி; கூழுக்கு உப்பு இல்லை என்பார் கோடி.

பாலுக்குச் சீனி இல்லை என்றோர்க்கும் கூழுக்குப்பு இல்லை என்றோர்க்கும் விசாரம் ஒன்றே.

(கூழுக்குடப்பு குல்லை கவலை ஒன்றே,)

பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்.

பாலுக்கு மிஞ்சின சுவையும் இல்லை; பல்லக்குக் மிஞ்சின சொகுசும் இல்லை.

பாலுக்கு மிஞ்சின பவிசும் இல்லை; சொகுசும் இல்லை 16165

(பாலுக்கு மிஞ்சின பசுவும்.)


பாலுக்கு வந்த பூனை மோரைக் குடிக்குமா?

பாலுடன் கூடிய நீர் போல.

பாலும் ஆயிற்று, மருந்தும் ஆயிற்று.

(ஆம்.)

பாலும் சாதம் சாப்பிடு என்றால் பாழும் வீட்டைக் காக்கிறேன் என்பது போல.

பாலும் சோறுமாய்த் தின்கிற பாளையக்காரன் மோட்டு வளையை எண்ணிகிறது போல. 16170


பாலும் தேனும் கலத்தாற் போல.

(சேர்ந்தாற் போல.)

பாலும் நீரும் போல

(+நாரும் பூவும் போல,)