பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21


பொ

பொக்கை வாய்க்கு ஏற்ற பொரிமா.

பொக்கை வாயன் மெச்சினானாம் பொரிமாவை.

பொக்கை வாயில் போச்சுப் பொரிமா என்றானாம்,

பொங்கப் பானை எடுக்கப் போனவளுக்குத் தங்கப் பானை கிடைத்ததாம். 17355


பொங்கல் வந்தால் தெரியும், பிறந்த இடத்துப் பெருமை.

பொங்கலும் போச்சு, போகியும் போச்சு; பொண்ணை அனுப்படா பேயாண்டி.

பொங்க வர மாட்டேன்; தின்ன வருவேன்.

(திங்க. )

பொங்கியும் பால் புறம் போகவில்லை.

பொங்கின பால் பொய்ப் பால். 17360


பொங்கினவர் காடு ஆள்வார்.

பொங்குகிற பதநீருக்குப் பதம் போட்டது போல.

பொங்குகிற பாலுக்கு நீர் தெளித்தது போல.

பொங்க சனி செல்வத்தைப் பொங்கச் செய்யும்.

பொங்கு சனி போய் மங்கு சனி வந்தது; மங்கு சனி போய்

கொங்கு சனி வந்தது. 17365

(சிரங்குச் சனி.)


பொங்கும் காலத்தே புளி நயக்கும்; மங்கும் காலத்தே மாங்காய் நயக்கும்.

பொங்கும் காலம் புளி பூக்கும்; மங்கும் காலம் மாங்காய் காய்க்கும்.

பொங்கும் காலம் புளி, மங்கும் காலம் மாங்காய்.

பொங்கும் சனி; மங்கும் சனி.

பொட்டி முறித்த பயனுக்குச் சட்டையும் தலைபாகையும்பார். 17370


பொட்டு இல்லா நெற்றி பாழ்.

பொட்டும் பொடியும் தட்டும் சவலையும்.