பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

39


மடியில் நெருப்பைக் கட்டிக் கொள்வார்களா?

மடியில் பணம் போய் வழியில் சண்டையை இழுத்ததாம்.

மடியிலே கனம் இருந்தால்தானே வழியிலே பயம்?

மடியிலே பிள்ளைப் பூச்சியைக் கட்டிக் கொண்ட மாதிரி.

மடியிலே பூனைக் குட்டியைக் கட்டிக் கொண்டு சகுனம் பார்ப்பது போல. 17780

மடியிலே மாங்காய் போட்டுத் தலையை வெட்டலாமா?

மடியை அறுத்துப் பால் குடித்தது போல.

(மடுவை.)

மடியைப் பிடித்துக் கல்லைக் கட்டி மயிரைப் பிடித்துக் காசு வாங்கினான்.

(கள்ளை ஊற்றி கள்ளைக் கொடுத்து விட்டு. முடியைப் பிடித்து.)

மடியைப் பிடித்துக் கள் வார்த்து மயிரைப் பிடித்துக் காசு வாங்குகிறதா?

மடியைப் பிடித்து மாங்காய் போட்டு முடியைப் பிடித்துப் பணம் வாங்கு. 17785


மடி விதை முந்து முன்னே பிடி விதை முந்தும்.

மடை ஏறப் பாய்ச்சினால் தடை ஏற விளையும்.

மடையன் வரகு விதை.

மடையனுக்கு மறுமொழி இல்லை.

மடைவாய்க் கொக்குப் போல. 17790


மண் ஆயினும் மனை ஆயினும் காப்பாற்றினவர்களுக்கு உண்டு,

மண் இட மண் இட வீட்டுக்கு அழகு: பொன் இடப் பொன் இடப் பெண்ணுக்கு அழகு.

மண் உருகப் பெய்யும் புண்ணியப் புரட்டாசி.

மண் ஒரம் நின்று வழக்கு ஒரம் பேசுவது போல.

மண் கட்டிப் பிள்ளைக்கு எரு மூட்டை பணியாரம். 17795


மண் காசுக்குச் சாம்பற் கொழுக்கட்டை.

மண் குதிரை ஆற்றில் இறங்குமா?

மண் குதிரையை நம்பி ஆற்றிலே இறங்கலாமா?

மண் சோறு புண் படுத்தும்.

மண்டுக்குப் புளி; மனைக்கு வேம்பு. 17800

(மண்ணுக்குப் புளி.)


மண்டை உள்ள மட்டும் சளி போகாது.

(உள்ளவரையில். சனி இருக்கும்.)

மண்டைக்குத் தக்க கொண்டை, வாய்க்குத் தக்க பேச்சு.

(ஏற்ற கொண்டை.)