பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

தமிழ்ப் பழமொழிகள்


முழத்துக்கு மேலே அறுக்காதே; முடியைப் போட மறக்காதே,

(தையலில்.)

முழம் வரால், சாண் தண்ணீரில்.

முழிக்கிறதைப் பார்: கிழக் குரங்கைப் போல.

(விழிக்கிறதை.)

முழுச்சட்டி பேர்க்கிற பன்றிக்குக் கொமுக்கட்டி விட்டது போல.

முழுக்க முழுக்க நனைந்த பின் முக்காடு எதற்கு? 18885


முழுகிக் குளித்து முக்காதம் போனாலும் வக்கு கொக்கு ஆகுமா?

முழுகி முப்பது நான் ஆச்சது: இறங்கி உப்பு அள்ளக்கூடவில்லை என்கிறான்.

முழுச்சோம்பேறி முள் உள்ள வேலி.

முழுதும் கெட்டார்க்கு வெட்கம் ஏது?

முழுதும் நனைந்தவருக்கு ஈரம் இல்லை. 18890


முழுப்பங்குக்காரனுக்கு முந்திரிப் பங்குக்காரன் மிண்டன்.

(முண்டன்.)

முழுப் பூசணிக்காயைச் சோற்றிலே மறைப்பது போல.

(சோற்றோடு.)

முள் ஒடிந்து முப்பது நிமிஷம் ஆச்சு.

முள் தைத்த துன்பத்தை முள்தான் போக்க வேண்டும்.

முள் மரத்தை முளையிலே கிள்ள வேண்டும். 18895


முள்ளாலே எடுப்பதைச் கோடரியால் எடுத்தானாம்.

முள்ளாலே எடுப்பதைக் கோடரியாலே இழுத்துக் கொள்ளாதே.

முள்ளாலே முள்ளை எடுக்க வேண்டும்; இரும்பாலே இரும்பை அறுக்க :வேண்டும்.

முள்ளின் மேல் சீலையைப் போட்டால் மெள்ள மெள்ளத்தான் எடுக்க வேண்டும்.

(வாங்க வேண்டும்.)

முள்ளினால் முள் களையுமாறு. 18900

(பழமொழி நானுாறு.)

முள்ளுக்குக் கூர்மையும் துளசிக்கு வாசனையும் இயற்கை.

முள்ளுக்கு முனை சீவி விடுவார்களா?

முள்ளு முனையிலே மூன்றுகுளம் வெட்டினேன்; இரண்டு குளம் பாழ்;

ஒன்று தண்ணீரே இல்லை.

முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்; அதுவும் முள் தைத்த வாய்வழியே

எடுக்க வேண்டும்.

முளைக்கையில் உண்டானதுதான் முற்ற வரும். 18905