பக்கம்:தமிழ்மாலை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 24 தனித்தமிழாக மாற்றம்

செல்வியார் ஒரு படி மேலே போய், தனனுடன் பிறந்தார் பெயர்களில் செல்வன் திருநாவுக்கரசு தவிர மற்றைச் சொற்கள் வடமொழியில் இருப்பதை ஒர்ந்து கண்டு அவற்றையெல்லாம் இவ்வாறு மாற்றினார்:

ஞானசம்பந்தம் - அறிவுத்தொடர்பு மாணிக்கவாசகம் - மணிமொழி

சுந்தரமூர்த்தி * - அழகுரு திரிபுரசுநதரி - - முந்நகரழகி

என்றெல்லாம் மாற்றினார். அவரவரும் பிறரும் முன்னமைந்த பெயரிலேயே வழங்கிக்கொள்ளினும் செல்வியார். தாம் அமைத்த தனித்தமிழ்ப் பெயர்களாலேயே குறித்தும், அழைத்தும் மகிழ்ந்தார்.

மற்றும், தனித்தமிழ்க் கட்டுரை என்னும் நூலையும் எழுதினார். மேலும் 12 நூல்களைத் தனித்தமிழிலேயே காலப்போக்கில் எழுதினார். "வடசொற்றமிழ் அகர வரிசை” என்னும் அகரமுதலி ஒன்றையும் மற்றவர்க்குத் தனித்தமிழ்ச் செயற்பாட்டிற்குத் துணையாகத் தொகுத்தார். கருத்தைக் கொள்கையாக்கிய செல்வியார் கொள்கையைக் கடைப்பிடியாக்கினார்.

அடிகளாரும் தம் பெயரை முன்னே குறித்தது போன்றுமறைமலையடிகள் என்று மாற்றிக்கொண்டு அதனையே கையாண்டு வந்தார். மற்றும் தாம் வெளியிட்டு வந்த “ஞானசாகரத்தை "அறிவுக்கடல்” என்றும், "சமரச சன்மார்க்கநிலையத்தை"பொதுநிலைக்கழகம்" என்றும்"மாணிக்கவாசகர் நூலகத்தை" "மணிமொழி நூலகம்” என்றும், “சித்தாந்த தீபிகை'யை "உண்மை விளக்கம்” என்றும் மாற்றியமைத்தார். உரையாடலிலும் பேச்சிலும் எழுத்திலும் இதனை விடாப்பிடியான கொள்கையாகக் கொண்டார்.

முன்னர் எழுதி வெளியிட்ட நூல்கள் மறுபதிப்பிற்கு வரும்போது அவற்றிலமைந்த வடசொற்களையெல்லாம் நீக்கி உரிய இனியதமிழ்ச் சொற்களையே பெய்து பதிப்பித்தார். இதனை நூல்களின் முன்னுரையில்,

"இந்நூல் நடையின்கண் ஆங்காங்கு விரவியுள்ளசிற்சில வடசொற்களும்அம்மூன்றாம்பதிப்பின்கண்முற்றும்களைந்துவிடப்படும்"

என்று குறித்தார்.

தாம் நூல்களைப் பயிலும்போதே இக்கருத்து தோன்றியதாகவும் அதற்கொரு முறை காணவேண்டும் என்றும் கவனத்திற் கொண்டிருந்த அடிகளார்.இந்நிகழ்ச்சிமுதல் இம்மாற்றத்திற்கு விளக்கம் தரவும் மறக்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/31&oldid=687091" இலிருந்து மீள்விக்கப்பட்டது