பக்கம்:தமிழ்மாலை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

எண்ணத்தையும், தமிழுணர்வினர்க்கு ஒரு தனிப்பட்ட உணர்ச்சியையும் தூண்டியது. புலவர்களிற் பலரும் தமிழவேள் போன்றோரும் தனித்தமிழ் உணர்வைக் கொள்ள ஒப்பினர்.

இவ்வாண்டுவிழா நிகழ்ச்சிக்குப் பின்னர் பையப்பையத் தமிழ்நாடெங்கனும் இவ்வுணர்ச்சி பரவலாயிற்று. இதில் மிக முழுகிய அடிகளார், - - -

"வடசொற்களைத் தமிழில் தமிழுருவில் இடம்பெறச் செய்வதற்குத் தம் நூலிலேயே, "வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே” என்று இலக்கணமே வகுத்திருப்பது தவறு" என்றும் எழுதினார். பேசினார். தமிழ்நலங்கருதிய ஆழ்ந்த உணர்வையே இது புலப்படுத்துகிறது.நாம் போற்றும் அரிய தமிழ் இலக்கண நூல் தந்த தொல்காப்பியரையே குறைகூற எழுந்த அறிவும் உணர்வும் அடிகளாரின் தனித்தமிழ்க் கொள்கையின் முத்திரையைப் பளிச்சிட்டுக் காட்டுகின்றன. பாவேந்தரும்,

'ஒல்காத பெரும்புகழ்த் தொல்காப்பியமும்

நன்னுரலும் தமிழர்க் கெல்லாம் நல்கரிய நன்மையெலாம் நல்கின.என்

றால் நாமும் நன்றி சொல்வோம்"

என்று நன்றி சொல்கின்றவர்.

"இனித்திடும்அவ் விருநூலில் வடமொழிஏன்?

வடவெழுத்துக் கொழுங்கு தான்ஏன்? என்னும் வினாவையும் விடுத்து அகத்தியர் காப்பியர்கள் கெடுப்பினும்" என்றும் சாடினார். தமிழைத் தாய்மொழியாக உணர்வால் ஏற்றுக்கொள்ளப் பிறர், -

விட்டிலே தூத்தம் என்பார்

வெளியிலே பிழைப்பிற்காக ஏட்டிலே தண்ணீர் என்பார்' * , என்று தோலூரித்துக் காட்டியது போன்று இயற்கையில் தமிழ்ப் பகைவர் தனித்தமிழை எண்ணாதது பெருங்குறையன்று தமிழரே அதிலும் தமிழ் இலக்கணம் எழுதியோரே ஆழ்ந்த புலமையிருந்தும், தாய்மொழி உணர்வு இன்மையால் - -

தமிழ்நூற் களவியை அவற்றுள் ஒன்றே யாயினும் தனித்தமிழ் உண்டோ?" . . . . என்று நம் இலக்கணக்கொத்தில் அவர் எழுதியதை அவர் சொற்றொடராலேயே சொன்னால், முக்குணவசத்தால் முறைமறந்தறைத்தார் என பலரும் கருதலாம். இலக்கணக்கொத்து ஆசிரியர் சொல்வதுபோல் தனித்தமிழ் நூல் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/33&oldid=687093" இலிருந்து மீள்விக்கப்பட்டது