பக்கம்:தமிழ்மாலை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

பொழிவாற்றவேண்டி எழுதுவோர்க்கும் அணுகுவோர்க்கும் இவர் சில விதிப்புகளை வைத்தார்.அக்கால இரண்டாம் வைப்புக் கட்டணத்துடன் தமக்கு உதவியாக வருவோர் ஒருவர் அல்லது இருவர்க்கும் பயணக் கட்டணம் முன்பணமாகத் தரவேண்டும். தங்குதற்கு வளமான இடம்; தம்முடன் வருவோர்க்குத் தங்கும் வாய்ப்புகள். உணவிற்கு ஏற்பாடு செய்ய பெரும் பட்டியல் ஒன்று. அதில் மூன்று வேளைக்கும் தனித்தனியாக உணவு வகைகளுடன் ஊட்டமான உணவுப் பட்டியல் உண்டு. சொற்பொழிவின் இடையில் பால் பருகுவதற்குத் தனிக்குறிப்பு. இவற்றிற்குமேல் பொழிவிற்காக 300 வெண்பொற்காசுகள். அடுத்தடுத்துக் கூட்டங்கள் அமைக்க விரும்பின் 200200,150 வெண்பொற் காசுகள் வழங்கவேண்டும். இத்தொகை இக்கால மதிப்பில் 100 மடங்கு எனலாம். இதனால்தமிழ்ச் சொற்பொழிவாளரின் தகவை உயர்த்தினார். -

அடிகளாரை அழைத்துப் பயன்பெற வேண்டும் என்று கருதியோர் பலர் இக்கட்டுப்பாடுகளுக்கும் தொகைக்கும் ஈடுகட்டஇயலாதவராக மொனகினர். வெளிப்படையாகவே திருச்சியில் ஒருநிகழ்ச்சி நேர்ந்தது.

திருச்சியில் சைவ சித்தாந்தம் பற்றி உரையாற்ற அடிகளார் அழைக்கப் பெற்றார். முறைப்படி யாவும் ஆற்றப்பட்டன; தொகையும் சேர்த்துத்தான். அடிகளார் நிறைவாகப் பேசிநிறைவேற்றினார். கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர் நன்றி கூறினார். நன்றியுரையில் அடிகளார் சொற்பொழிவால் மக்கள் பயனடைவதை நிறைவாகக் குறிப்பிட்டார். ஆனால், பொழிவிற்கு அடிகளார் குறிக்கும் தொகைபற்றிக் குறையாகக் குறிப்பிட்டார்.இவ்வாறு மிகு தொகை கேட்பதால் அடிகளாரால் ஆழமாகப்பரவும் சைவமும் தமிழ்ச் சிறப்பும் பரவலாக நிகழ முடியாது போவதையும்,மிகு தொகை வழங்க முடியாமல் பலர் அகல்வதையும் குறிப்பிட்டு இனியேனும் தமிழ் நலங்கருதியும், சைவச்சீர் கருதியும் அடிகளார் மிகு தொகை வேண்டாமலும் அதிகம் வாய்ப்பைக் குறிக்காமலும் இருக்க வேண்டும் என்று துணிவாகக் கூறினார். செவிமடுத்துக் கொண்டிருந்த அடிகளார் ஒரு புன்முறுவலோடு நிறுத்திக் கொண்டார்.தனியாகவும் நன்றி கூறியவரிடம் ஒன்றும் கூறவில்லை. இவ்வாறு வேண்டி நன்றி கூறியவர்.தற்போதும் முத்தமிழ்க் காவலராக வாழும் திரு.கி.ஆ.பெ.விசுவநாதனார்.

அடுத்து ஒரு முறை சென்னை சென்றிருந்த முத்தமிழ்க் காவலர் அடிகளாரை இல்லத்தில் கண்டு உரையாடி மகிழ்ந்து விடைபெற முந்தினார். அப்போது அடிகளார் முத்தமிழ்க் காவலரிடம்,"அன்பரே...அண்மையில் திருச்சிக் கூட்டத்தில் நன்றி உரைக்கும்போது யாம் பொழிவிற்கு அதிகம் தொகை கேட்பதைக் குறையாகச் சொன்னீர், ஒன்றை நினைத்துப் பாரும். ஒரு பெண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/52&oldid=687112" இலிருந்து மீள்விக்கப்பட்டது