பக்கம்:தமிழ்மாலை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75

கடற்கரை நிலவளமும், வயற்புற நிலவளமும் கலந்து தோன்றும் ஒரு காட்சி வண்ணனை.கடற்கரை வெண்பொடிமணலில் வயற்புறத்தாமரை மலரில் பொன்னிறத் தூள்கள் காற்றில் அடித்துக் கொணரப்பெற்று விழுந்தன. வெண்மை மணலில் பொன்னிறத் தூள் கூட்டாகக் கிடந்ததை, கோழிமுட்டை பொற்படுத்தாங்கு" என்று கோழிமுட்டைஉடைந்து வெள்ளைக் கருவின் பறலின் மேல் மஞ்சட்கருவும் கோழிமுட்டை உடைப்பைக் கூறியது வியக்கவும் தக்கது.

இக்கால உலகியல் நடப்பையும் அரசியல் இயக்கத்தில் திகழ்வதையும் படம்பிடிப்பது போன்ற ஒரு பாடல் குறிக்கத்தக்கது: -

இக்கால அரசியல் இயக்கங்களில் ஒருவருக்கு நண்பராக நம்மவர் என்றிருந்தவர் பின்னர் உகந்த காரணம் ஏதும் இன்றி எதிரியாகிவிடுவர். காரணமின்றி எதிரியாவதால இவர் ஏதிலர்’ எனப்படுவர். இதனையும் பார்க்கின்றோம்.இவ்வறக்கட்டளையை அமைத்த கலைஞர் கண்டஏதிலர் பலர். மற்றொரு வகை நாட்டுநலம் கருதாத நயமில்லாதவர்கள் அரசியல் தமராகக் கூடிக்கொள்வதைக் காண்கிறோம். எனவே, அரசியலில்நிலையானநண்பரும் இல்லை, நிலைத்த பகைவரும் இல்லை என்று பேசப்படுவதையும் கேட்கின்றோம். எனவே,வேண்டியநண்பர் வேண்டாத பகைவர் என்று ஒன்றும் பேசுவதற்கில்லை.இதுவீண்பேச்சு..இப்பேச்சுக்களை விட்டு ஒற்றியூர் முருகனை வணங்கும் குறிக்கோளைக் கடைப்பிடிப்பாயாக என்று தன் நெஞ்சிற்குக் கூறுவதாக அடிகளார் பின்வருமாறு எழுதியுள்ளார்: - -

“நமரா யிருந்துபின் ஏதில ராவர் நயமிலருந் நமராவ ரென்னிற் றமர்பிற ரென்று தகவுசொல்லி அமராடி றிறல் வரிமுகன் டாபலை யாழியொற்றிக் குமராவென்றோதிக் குடந்தங்கொண்ட டேத்தக் குறிக்கோணெஞ்சே." அடிகளார் சொல்லாட்சிகளில் மிக அரிய சொற்களும் இடம்பெறும்.இப்பாட்டில் குடந்தம் என்றொரு அரிய சொல்லைப் பெய்துள்ளார். கைகளைக் குவித்துச் சற்றே முதுகு வளைந்து வணங்குதலுக்கு குடந்தம் என்பது சொல்."குடந்தம், கூப்பி மெய்கோட்டி நிற்றல்" என்று பொருள் கூறுகிறது திவாகரம். முதுகு அதிகம் வளைந்து விட்டால் அது கூழைக்கும்பிடு ஆகிவிடும். சற்றேகுனிந்து வணங்குதலைக் குடந்தம் குறிக்கும்.இவ்வாறு முருகனை வணங்க வேண்டும் என்கின்றார்.

“முன்னோர் மொழி பொருளே யன்றி அவர் மொழியும் பொன்னே போல் போற்றுவம்" என்பது நல்லாசிரியர் மரபு அடிகளார் இதில் விலகவில்லை. சான்றோர் பலர் படைத்த தொடர்களை அவ்வாறே எடுத்தாண்டும் கருத்தை வாங்கி ஆண்டும் பாடல்களைப் படைத்துள்ளார். சான்றுக்கு ஒன்று:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/82&oldid=687150" இலிருந்து மீள்விக்கப்பட்டது