பக்கம்:தமிழ்மாலை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81

பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம் என்பதும் தமிழர் மதம் grough Saiva Sidhanta as a philosophy of practial knowledge’srāīrg)h ஆங்கில நூலும் சமயம் என்பது சைவமே, அது தமிழர் சமயம் என்கின்றன. சைவ சித்தாந்த ஞானபோதம் சைவத்தனித்தன்மையை நிலைநாட்டுகின்றது,

'கடவுளுக்கு அருளுருவம் உண்டு” என்று சைவத்தின் இலிங்க உரு கூறி, திருக்கோயில் வழிபாட்டைவிளக்கி, அதே மூச்சில்"சிறு தேவதைகட்கு உயிர்ப்பலி இடலாமா” என்று வினவி அதனை வன்மையாக மறுத்து, கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் வைசமாகா” என்று இயற்கை உருவகக் கொள்கை காட்டி, புராணப் பொய்கதைகளைச் சற்று மேற்பூச்சுடன் மறுத்துச் "சைவப் பாதுகாப்பு கூறித்தம் சமயவியலை நிறைவேற்றியுள்ளார். 6. ஆய்வியல் (6 நூல்கள்)

கடவுளை ஆராய்வதே கடுங்குற்றம் என்றிருந்த கண்மூடிக் கருத்தை உடைத்து ஆராய்ந்தவர் அடிகளார். தொட்டவற்றையெல்லாம் துருவி ஆராய்ந்தார். "மதிநுட்பம் நூலோடு உடைய இவர்க்கு அதிநுட்பங்கள் கைவந்த வெற்றிகளாயின. முதற்பெரும் ஆய்வு தமிழினப் பெருமையை நிலைநாட்டியதாயிற்று.

‘பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்' என்னும் ஆய்வு பல உண்மைகளை வெளிக்கொணர்ந்தது. உலகின் முதல் தோற்ற மூத்த மொழி தமிழ் என்பதைச் சான்றுகளுடன் நிறுவும் அடிகளார் மும்மொழிப்புலமையை நுண்ணிய நோக்குடன் செலுத்தியுள்ளார்.தமிழரின் வட்டெழுத்தே உலக முதல் எழுத்து என்று காட்டி வடமொழி எழுத்தில்லாதிருந்ததை நிறுவித் தமிழ் எழுத்துக்களைக் கண்டேவடமொழி எழுத்துக்களைப்படைத்துக்கொண்டதை நிறுவியுள்ளார். 'காக்கைக்குத் தன்குஞ்சு பொன் குஞ்சு என்பதற்குச் சற்றும் இடமில்லாமல் ஆய்ந்தார். அவர் தம் ஆய்விற்கு மூலநூல்களாக

"அரிய பெரிய முழுமாணிக்க மணிதான் தொல்காப்பியம், திருக்குறள், இருக்கு வேதம், திரிபிடகம்"

என்று கனா கண்டமையே அவர்தம் நடுநிலைக்கு சான்றாகும்.வடவர்மறையில் கூறப்படும் 'ஃச்மிருதி நினைக்கப்படுவது; சுருதி கேட்கப்படுவது. ‘எழுதப்படுவது' என்று ஒன்றும் இல்லை. இதுகொண்டே வடமொழி எழுத்தின்மையைச் சுட்டி"நூல்களைப் பாதுகாக்கத்திருத்தமாக அவற்றை ஒத வேண்டும்” என்று வற்புறுத்தும் பிராதிசதங்கியக் கருத்தைக் காட்டி எழுத வகையின்றி ஒதியே காக்க வேண்டும் என்னும் குறிப்பால் வடமொழி எழுத்தின்மையை நிறுவினார். இதற்கு ஆங்கில அறிஞர்களது ஆய்வு முடிவுகளையும் துணையாக்கினார்.

  • இக்குறியிடப்பெற்றவை தனித்தனி வெளியீடுகளாகவும் வந்துள்ளன.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/88&oldid=687156" இலிருந்து மீள்விக்கப்பட்டது