பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8. திருக்குறள்
(1) திருவள்ளுவர் காலம்

திருக்குறளும் மணிமேகலையும்

சங்க நூல்களில் ஒன்றான மணிமேகலையில் திருவள்ளுவரால் செய்யப்பட்ட திருக்குறள் பாக்களுள் ஒன்று அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளது காண்க:

தெய்வங் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை. (குறள்-55)

இக் குறட்பா மணிமேகலையில்,

தெய்வங் தொழாஅன் கொழுகற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் பெருமழை என்றவப் பொய்யில் புலவன் பொருளுரை தேராய்’ ’

(மணிமேகலை, சிறைசெய் காதை, வரி 59-61)

என்று மணிமேகலை பாடிய மதுரைக் கூலவாணிகன் சாத்தனாரால் எடுத்தாளப்பட்டது. பரசுராமன் காலத்தில் வாழ்ந்த ககந்தன் என்ற பழைய சோழன் மகன் ஒருவன் மருதி' என்ற பார்ப்பன மங்கையைக் காவிரிக் கரையில் கண்டு காம உணர்ச்சியால் அழைத்தான். அவள் மனங் கலங்கி, உலகில் மழைவளந் தரும் பத்தினிப் பெண்டிர் பிறர் நெஞ்சு புகார். நான் இவன் உள்ளம் புகுந்தேன். இதற்குக் காரணம் யாது?’ என்று சதுக்கப் பூதத்தை அணுகித் தன் மனக் கவலையை வெளியிட்டாள். அதற்கு அப்பூதம் மேற்சொன்ன மூன்று வரிகளையும் கூறியது என்பது வரலாறு. இது நிற்க.