பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

151


    இங்ஙனமே சங்க காலத்திற்குப் பிற்பட்ட பெருங்கதை8, சைவத் திருமுறைகள், ஆழ்வார்களின் அருட் பாடல்கள் முதலிய அனைத்திலும் குறட்பாக்களும் அவற்றின் தொடர்களும் கருத்துகளும் மிகப் பலவாகக் கையாளப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் நோக்க, இன்றுள்ள சங்கநூற் பாடல்கள் முதல், பின்னூல்கள் அனைத்திற்குமே திருக்குறள் போற்றத்தக்க அறநூலாய் விளங்கி வந்தது என்பது எளிதில் புலனாகும். 

திருவள்ளுவர் காலம்

    ஆயினும், திருவள்ளுவர் ஏறக்குறைய எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்னுங் கேள்வி எழுதல் இயல்பு. அதற்கு ஒருவாறு விடை காணல் நமது கடமை யாகும்.
    1. திருவள்ளுவர் காலம் சங்க காலத்தின் முற்பகுதியைச் சேர்ந்தது என்று கூறுவோரும், சங்க காலத்திற்குப் பிற்பட்ட காலத்தது என்று கூறுவோரும், இன்றுள்ள சங்கப் பாடல்களிற் பல ஏறத்தாழக் கி. பி. முதலிரண்டு நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை என்பதை ஒப்புகின்றனர். இதை நோக்க, நாம் இதுகாறும் கண்ட சான்றுகளைக் கொண்டு, திருவள்ளுவர் காலம் இம்முதலிரண்டு நூற்றாண்டு கட்கும் முற்பட்டதெனக் கருதலாம். 
   2. 'ககந்தன்'9 என்ற பழைய சோழ அரசன் காலத்திலேயே திருக்குறள் அறிவைப் பொது மக்களிடம் சதுக்கப்
   8. குணாட்டியர் பைசாச மொழியில் செய்த பிருகத் கதையைக் கி. பி. 6ஆம் நூற்றாண்டின் இடையில் கங்க நாட்டு அரசனாக இருந்த துர்விநீதன்'வ்டமொழியில் இயற்றி னான், அதனைப் பின்பற்றியே கொங்கு வேளிர் என்பவர் தமிழில் பெருங்கதையைப் பாடியுள்ளார். எனவே, அத் நூலின் மேல் எல்லை ஏறத்தாழக் கி. பி. 7ஆம் நூற்றாண்டு என்னலாம் . -
  9. இப்பெயர் அப்பண்டைக்காலச் சோழனுக்கு வழங்கிய தென்பது ஐயத்திற்குரியது. -