பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156 தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

கிடைக்கும்வரை, அவர் தொல்காப்பியரை அடுத்துக் கிறிஸ்துப்பெருமானுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்தவர் என்று கூறுதலே பொருத்தம் என்பது தெரிகிறது.

திருக்குறளுக்கு மூல நூல்கள்

    'திருக்குறள் இன்றுள்ள சங்கப் பாக்கட்கு முற்பட்டதாயின், அதற்குரிய மூல நூல்கள் யாவை?' என்னும் கேள்வி அடுத்து எழுவதாகும்.
    தொல்காப்பியர் காலம் கி. மு. 4ஆம் நூற்றாண்டு என்பதும், தொல்காப்பியத்திற்கு முன்னரும் சமகாலத்திலும் இன்றுள்ள சங்கப் பாக்களுக்கு முன்னரே இலக்கண ஆசிரியர் பலர் இருந்தனர் என்பதும், இலக்கிய நூல்கள் பல இருந்தன என்பதும் சென்ற பகுதியிற் கூறப்பட்டன. "இவற்றால் தொல்காப்பியனார் தம் இலக்கணத்திற்குக் கருதிய இலக்கியங்கள் எத்துணையோ பல, அவர்க்கு முன்பே இத் தமிழ்நாட்டு வழங்கின என்றே ஒருதலையாகத் துணியலாம்.15
    எள்ளிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுதல் போல இலக் கியத்திலிருந்து எடுக்கப்படுவது இலக்கணம். ஆதலால், தொல்காப்பியத்திற்கு முற்பட்ட இலக்கண நூல்களுக்குக் கருவூலங்களாகப் பல இலக்கிய நூல்கள் இருந்திருத்தல் வேண்டும் என்பது தோற்றமன்றோ? அவை பரந்துபட்ட காலத்தினவாதல் வேண்டும். அவற்றுள் சிலவே இறையனார் களவியலுரை முதலியவற்றில் பெயரளவில் சுட்டப்படும் நூல்கள். அப்பழைய இலக்கிய நூல்களே அறம். பொருள், இன்பம் பற்றிய பல குறிப்புகளைத் திருக்குறளுக்கு உதவியிருக்கலாம்.
    மிகப்பல நூற்றாண்டுகட்கு முன்னிருந்து தமிழகத்தை ஆண்டுவந்த சேர, சோழ, பாண்டியருடைய ஆட்சிமுறை

15. ரா. இராகவையங்கார், தமிழ் வரலாறு, பக். 273.