பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா. இராசமாணிக்கனார் 157

களைக் கொண்டும், சான்றோர் வரைந்த மேற்சொன்ன பண்டை இலக்கியங்களைக் கொண்டும் உலகத்தார் அனைவரும் மனமுவந்து ஏற்றுக்கொள்ளும் முறையில் திருவள்ளுவர் தம் அறநூலைச் செய்து முடித்தனர் எனக் கொள்ளுதலே இதுகாறும் கண்ட உண்மைகளை நோக்கப் பொருத்தமாகக் காணப்படுகிறது.

முடிவுரை

    இதுகாறும் பேசப்பட்ட உண்மைகளால்,(1) தொல் காப்பியத்துக்குப் பின்பு எழுந்த நூல் திருக்குறள் என்பதும், (2) தொல்காப்பியர் காலம் ஏறத்தாழக் கி. மு. 4ஆம் நூற்றாண்டு என அறிஞர் கருதுவதால், திருக்குறள் கி.மு. 4ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டது என்பதும்,(3) கி. பி. முதலிரண்டு நூற்றாண்டுகளைச் சேர்ந்தனவாகச் சிலரால் கருதப்படும் பெரும்பாலான தொகை நூற்பாக்களிலும், சிலப்பதிகாரம் மணிமேகலை எனப்படும் காவியங்களிலும் குறட்பாக்களின் சொற்களும் தொடர்களும் கருத்துகளும் ஆளப்பட்டிருத்தலின், அப்பாக்களுக்கு (கி. பி. முதல் மூன்று நூற்றாண்டுகட்கு) முற்பட்டது திருக்குறள் என்பதும் தெளியலாம். தெளியவே, வேறு தக்க சான்றுகள் கிடைக்கும் வகையில், திருவள்ளுவர் காலம் ஏறத்தாழக் கி. மு. 1 முதல் 300க்கு உட்பட்டது என்று கோடலே அமைவுடையதாகும்.
                               (2) திருக்குறட் சிறப்பு 
    திருவள்ளுவர் தம் காலத்தில் வழக்கில் இருந்த பல்வேறு தமிழ் இலக்கிய நூல்களையும், வழி வழியாக வந்த தமிழர் அரசியல் நெறியையும் நன்கு அறிந்தே திருக்குறள் நூலைச் செய்தவராவர். இந்நூற் கருத்துகள் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதவை. ஆதலின் நம் நாட்டவரும் பிறநாட்டவரும் இதனைத் தத்தம் மொழிகளில் பெயர்த்து எழுதி வைத்துள்ளனர்.16 மக்களாய்ப் பிறந்த
    16. வீரமாமுனிவர், போப்பையர் முதலிய மேனாட்டுத் தமிழ் அறிஞர் இலத்தீன், செருமன், பிரெஞ்சு, ஆங்கிலம்