பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180

தமிழ் மொழி—இலக்கிய வரலாறு


கரிகாலனே இமயம் வரையில் சென்று மீண்டதாகச் சிலப்பதிகாரம் செப்புகிறது, அவன் காலத்தில் கடல் வாணிகம் சிறந்திருந்தது என்பது பட்டினப்பாலையால் தெரிகிறது. எனவே, படை வலிமை மிகுந்த அவனே இலங்கை மீது படையெடுத்திருக்கலாம். அங்ஙனமாயின் (அவன் படையெடுத்த காலம் கி. பி.111-114 என்று இலங்கை வரலாறு கூறுவதால்) கரிகாலன் காலம் கி.பி.முதல் நூற்றாண்டின் இறுதி கி. பி. முதல் நூற்றாண்டின் முற்பகுதியுமாக (கி.பி. 115 வரையில்) இருக்கலாம்.

நெடுமுடிக்கிள்ளி (கி.பி. 115-136)

இவன் மணிமேகலை காலத்தவன். மணிமேகலை செய்த சாத்தனார் செங்குட்டுவன் காலத்தவர். செங்குட்டுவன் கய வாகுவின் (கி.பி.114-136) காலத்தவன். எனவே, இந் நெடுமுடிக்கிள்ளியும் அக் காலத்தவனே யாவன். அக்காலத்தில்தான் பாண்டிய நாட்டை ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ஆண்டுவந்தான். அவனுக்குப் பின்பு மதுரை யின் ஒருபகுதி அழிந்தது. இந்நெடுமுடிக்கிள்ளியோடு பூம்புகாரின் ஒரு பகுதி அழிவுற்றது என்று மணிமேகலை கூறு கிறது.

பிற சோழ வேந்தர் (கி. பி.136-300)

நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, மாவளத்தான், கிள்ளிவள வன், இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, போர்வைக் கோப்பெருதற்கிள்ளி, வேல்பல் தடக்கைப் பெருவிறல்கிள்ளி, முடித்தலைக் கோப்பெருநற் கிள்ளி, கோப்பெருஞ்சோழன், நல்உருத்திரன் முதலியோர் சோணாட்டை ஆண்டவர் என்று புறநானூற்றுப் பாடல்கள் புகழ்கின்றன. இவருட் சிலரேனும் கரிகாலனுக்கு முற்பட்டவர் ஆகலாம், பலர் பிற்பட்டவர் ஆக

பிளைநி, பெரிப்ளுஸ் ஆசிரியர், தாலமி போன்றோர் குறித்துள்ள வாணிகச் செய்திகள் யாவும் உண்மை என்-