பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

181

டாக்டர் மா. இராசமாணிக்கனார் 181

பதைப் புறநானூற்றுப் பாக்களும் கரிகாலனைப் பற்றிய பொருநர் ஆற்றுப்படை, பட்டினப்பாலை என்னும் நெடும் பாடல்களும் உறுதிப்படுத்துகின்றன.

புறநானூற்றின் காலம்

இதுகாறும் கூறப்பட்ட செய்திகளைக் காண, புற நானுற்றில் உள்ள பாக்களின் காலம் ஏறத்தாழக் கி. மு. 300 என்னலாம்.


வேதகாலத்தில் சொல்லப்பட்ட செய்திகளையும், புராண செய்திகளையும் கொண்டு வரலாறு எழுதி வரும் வரலாற்று ஆசிரியர்கள் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன், நெடியோன், வான்மீகியார், கோதமனார், கரிகாலன் இமயப் படையெடுப்புப் பற்றிய பாடல்களைக் கட்டுக் கதை என்று தள்ளுதல் ஆராய்ச்சி அறமன்று. இவை பற்றிய ரா. இராகவையங்கார், மு.இராகவையங்கார், திரு.நாராயணையங்கார் போன்ற புகழ்பெற்ற தமிழ்ப் பேராசிரியர்கள் செய்துள்ள ஆராய்ச்சிகளைத் தம் நூலிற் குறிப் பிடாமல் விட்டதும் அறமாகாது; இங்ஙனம் கூறவேண்டுவன வற்றைக் கூறாது, சங்க காலம் கி. பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளைச் சேர்ந்தது என்பதை மட்டும் பல இடங்களில் விடாமல் எழுதுதலும் அறமாகாது.