பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196

196 தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

  அக்கால அரசியல் உயர் அலுவலாளருள் சிலரும் கவி பாடும் ஆற்றல் பெற்று விளங்கினர். வள்ளுவன் என்பது அரசாங்க உள்படு கருமத் தலைவனுக்கு வழங்கப்பட்ட அலுவல் பெயராகும். அரசாங்கச் செய்திகளை அரசனுக்கு அறிவித்துவந்த உள்படு கருமத் தலைவன் 'செய்தி வள்ளுவன்’ எனப்பட்டான்போலும்! அவனது இயற்பெயர் பெருஞ்சாத்தன் என்பது. அவன் இந்நூலில் ஒரு பாடலைப் பாடியுள்ளான்.
  படைத்தலைவருள் சிறந்தவன் 'ஏனாதி' என்ற பட்டத்தைப் பெற்றிருந்தான். அவன் பாண்டியனுக்குப் படைத் தலைவன் ஆதலின் 'பாண்டியன் ஏனாதி' எனப்பட்டான். அவனது இயற்பெயர் நெடுங்கண்ணன் என்பது. அவனும் ஒரு செய்யுள் பாடியுள்ளான்.

நாணயங்களைப் பரிசோதித்த அரசாங்க அலுவலன் வண்ணக்கன் எனப்பட்டான். அவன் வடநாட்டான் அல்லது சுமார்த்தப் பிராமணருள் ஒரு பிரிவினன் ஆதலால் 'வடமன்'எனப்பட்டான் அவனும் இந்நூலில் ஒரு செய்யுளைப் பாடி யுள்ளான்.

தேவகுலம் என்பது கோவிலைக் குறிக்கும். தேவகுலத்தார் என்பது கோவில் அருச்சகரை அல்லது கோவில் அதிகாரியைக் குறிக்கும். அத்தகைய ஒருவரும் ஒரு பாடலைப் பாடியுள்ளார். 'முது கண்’ என்பதற்கு 'முக்கிய ஆதாரம்' என்பது பொருள்: முதுகண்ணன் என்பவன் அரசி யலுக்குச் சிறந்த அறிஞனாக இருந்தவன்போலும்! இக்கால அரசாங்க ஆலோசகர் (Advisor) போன்ற ஒரு பதவியாளனே முதுகண்ணன் எனப் பெயர் பெற்றிருத்தல் வேண்டும். அத்தகைய உயர்ந்த அறிஞர் ஒருவர் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என்பவர்.

ஆசிரியன் பெருங்கண்ணன், மதுரை ஆசிரியர் கோடங் கொற்றேவன். கணக்காயன் தத்தன் என்பவர் ஆசிரியத் தொழில் பூண்ட புலவர் பெருமக்கள். மதுரை எழுத்தாளன்